மகனை விடுவிக்க ரூ.1 கோடி கேட்டு வீடியோ வெளியிட்ட தீவிரவாதிகள்!

Last Updated : Aug 23, 2016, 01:06 PM IST
மகனை விடுவிக்க ரூ.1 கோடி கேட்டு வீடியோ வெளியிட்ட தீவிரவாதிகள்! title=

அஸ்ஸாம் மாநில பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த ரத்னேஸ்வர் மோரனின் மகன், குல்தீப் மோரன் என்பவரை கடந்த 1-ம் தேதி, அருணாச்சலப் பிரதேசத்தின் சங்லாங் பகுதியில் உல்ஃபா அமைப்பினர் கடத்திச் சென்றனர். 

இந்நிலையில், அவரை விடுதலை செய்ய வேண்டும் என்றால் 1 கோடி ரூபாய் தர வேண்டும் எனவும், பணம் தராவிட்டால், குல்தீப்பை சுட்டுக் கொன்று விடுவோம் எனவும் உல்ஃபா அமைப்பினர் மிரட்டல் விடுத்துள்ளனர். 

மேலும் மிரட்டல் வீடியோ ஒன்றையும் உல்ஃபா அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவில் முகமூடியணிந்த 5 பேருக்கு மத்தியில், துப்பாக்கி முனையில் நிறுத்தப்பட்டுள்ள குல்தீப், தன்னை மீட்கும் படி பெற்றோர் மற்றும் அஸ்ஸாம் முதல்வருக்கு கோரிக்கை விடுக்கிறார். மேலும், தனது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகவும் குல்தீப் குறிப்பிட்டுள்ளார். 

கடத்தப்பட்ட நபரை துப்பாக்கி முனையில் வைத்து மிரட்டல் வீடியோ வெளியிட்டு 1 கோடி ரூபாய் கேட்டிருப்பது அரசியல் வட்டாரத்திலும், மக்கள் மத்தியிலும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Trending News