Old Pension Scheme: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம் குறித்த சமீபத்திய செய்திகள் சில உள்ளன. ஓபிஎஸ் -ஐ மீண்டும் கொண்டு வர பலர் மிகுந்த முனைப்புடன் போராடி வருகின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் வருமா? தேசிய ஓய்வூதிய அமைப்பு என்ன ஆகும்? இவற்றுக்கான பதிலை இங்கே காணலாம்.
Central Government Employees: பழைய ஓய்வூதியத் திட்டத்துக்காக மாபெரும் போராட்டம்
மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ஊழியர்கள் தேசிய தலைநகரில் உள்ள ஜந்தர் மந்தரில் நவம்பர் 17 அன்று கூடி, பழைய ஓய்வூதியத் திட்டத்தை (OPS) மீண்டும் கொண்டு வரவும், தேசிய ஓய்வூதிய அமைப்பை (National Pension Scheme) ரத்து செய்யக் கோரியும் மாபெரும் பேரணியில் ஈடுபட்டனர்.
டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில், AINPSEF எனப்படும் அகில இந்திய என்பிஎஸ் ஊழியர் சம்மேளனம் (All India NPS Employees Federation) நடத்திய ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் என்பிஎஸ் மீது அதிருப்தி தெரிவித்து ஓபிஎஸ் -ஐ மீண்டும் கொண்டு வர கோரிக்கை விடுத்தனர். AINPSEF 5 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
NPS இன் கீழ் சுமார் 60 லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளனர். 2004 ஆம் ஆண்டு மத்திய அரசு NPS ஐ அறிமுகம் செய்தது. பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு பதிலாக இது கொண்டுவரப்பட்டது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், ஊழியர்கள் கடைசியாக பெற்ற ஊதியத்தில், 50% க்கு சமமான தொகை ஓய்வூதியமாக கிடைக்கும் உத்தரவாதம் உள்ளது. மத்திய அரசின் அனைத்து துறைகள் மற்றும் மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் தன்னாட்சி அமைப்புகள் அனைத்தும் NPS இன் கீழ் கொண்டு வரப்பட்டன. ஆயுதப்படைகள் மட்டுமே NPS வரம்பிற்கு வெளியே வைக்கப்பட்டன.
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்
UPS எனப்படும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (Unified Pension Scheme) ஏப்ரல் 1, 2025 முதல் செயல்படுத்தப்படும் என அரசாங்கம் சமீபத்தில் அறிவித்தது. இருப்பினும் ஊழியர்கள் இந்த பொராட்டத்தை மேற்கொண்டுள்ளனர். NPS போல UPS ஒரு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமாகும். ஆனால் இது பழைய ஓய்வூதியத் திட்டத்தின் விதிகளைப் போலவே கடைசியாக பெறப்பட்ட ஊதியத்தில் 50% க்கு சமமான ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது.
UPS Vs NPS: யுபிஎஸ் Vs என்பிஎஸ்
- யுபிஎஸ் அறிமுகம் ஆகியுள்ள நிலையிலும், என்பிஎஸ், அதாவது தேசிய ஓய்வூதிய முறையும் அமலில் இருக்கும் என அரசு கூறியுள்ளது. இந்த இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தை ஊழியர்களுக்கு அரசாங்கம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஓபிஎஸ் கோரிக்கை வலுத்து வரும் நிலையில், அரசு தனது முடிவை மாற்றிக்கொண்டு பழைய ஓய்வூதிய முறையை ஊழியர்களுக்கு வழங்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
- UPS அறிவிப்புக்கு பல ஊழியர் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்ததை அடுத்து, அரசாங்கம் அதை திரும்பப் பெறும் எண்ணத்தை நிராகரித்தது.
பேரணியில், முக்கிய ஊழியர் சங்கத் தலைவர்கள் தங்கள் கோரிக்கையை பரிசீலிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியை ஒருமனதாக வலியுறுத்தினர். OPS மீண்டும் கொண்டுவரப்படுவது அரசு ஊழியர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், அரசு மீதான நம்பிக்கையையும் பலப்படுத்தும் என்று அவர்கள் கூறுகிறார்கள். விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால் இயக்கம் தீவிரமடைந்து இந்தியா முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் வருமா? தேசிய ஓய்வூதிய அமைப்பு அல்லது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்படுமா? அரசாங்கத்திடம்தான் இதற்கான பதில் உள்ளது.
மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு: அதிரடியாய் உயரப்போகும் ஊதியம், ஓய்வூதியம், இந்த நாளில் அறிவிப்பா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ