போலி என்கவுண்டருக்கு எதிராக மனித உரிமை ஆணையத்திடம் தாம்பரம் கமிஷனர் மீது புகார் அளித்த பத்திரிகையாளர் வாராகி நேற்று இரவு திடீர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசாரின் பழிவாங்கும் செயல் என சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.
கேரள மாநிலத்தில் தனியார் விடுதியில் ரகசிய கேமரா வைத்து வாடிக்கையாளர்களை படம் பிடித்து வந்த விடுதி ஊழியர் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஊழியரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .
ஈரோடு கோபிசெட்டி பாளையத்தில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி இளம் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Badri Seshadri Arrest: சென்னையை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பத்ரி ஷேஷாத்ரி மணிப்பூர் கலவரம் குறித்து கருத்து தெரிவித்ததை தொடர்ந்து, அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
நெய்வேலி என்எல்சி போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ராமதாஸ் விடுதலை செய்யப்பட்ட நிலையில், பாமகவைச் சேர்ந்த 25 பேர் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
அமாலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது செல்லும் என தீர்ப்பளித்திருக்கும் மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன், அவர் தன்னை குற்றமற்றவர் என சட்டத்தின் முன் நிரூபிக்க வேண்டும், சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் அல்ல செந்தில் பாலாஜி என தெரிவித்துள்ளார்.
Tamilnadu News: கும்பகோணம் அருகே சாக்கோட்டையில் செயல்படும் தனியார் பள்ளிக்கு செல்லும் பாதை தொடர்பாக சாலை மறியல் ஈடுபட்ட பாஜகவினர் 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
ஓசூரில் தொழிற்சாலைக்கு இணைப்பு சாலை அமைக்க தடையில்லா சான்று வழங்க 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.