'டெஸ்பாட்டோ' இனைய புழுக்களின் விருப்பமான பாடல்களில் ஒன்று. இந்த பாடல் தொடர்பான சுவாரஸ்யமான கிளிப் ஒன்று சமீபத்தில் சமூக ஊடகத்தில் வைரலாக பரவி வருகிறது.
இரண்டு நிமிட மற்றும் ஒன்பது மணித்துளிகள் கொண்ட இந்த வீடியோவில், இரண்டு கால்குலேட்டர்கள் பயன்படுத்தி 'டெஸ்பாட்டோ' பாடலையே இசையமைத்து காட்டுகிறார் ஒருவர். கிட்டத்தட்ட 7 மில்லியன் பாரவியலர்களை எட்டியுள்ளது இந்த வீடியோ.
இந்த வேடியோவினை கண்டபின்னர், கால்குலேட்டர்களை இப்படியும் பயன்படுத்தலாமா என்ற கேள்வி மனதுக்குள் எழுகிறது.
மத்திய பிரதேசத்தின் அசோக்நாகர் நகரில் அமைத்துள்ள ஒரு தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை வழங்கப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அதில் அந்த மாணவர்கள் தோப்புக்கரணம் போடுகிறார்கள. குனிந்து இரு காலுகளுக்கு இடையில் கை விட்டு காதுகளை பிடித்தவாரு குனிந்த நிலையில் செல்கிறார்கள். அப்பொழுது அங்கு இருக்கும் ஒரு நபர், மாணவர்களின் பின்புறத்தில் தடியால் அடித்த படி செல்கிறார். சில மாணவர்கள் வலி தாங்க முடியாமல் கதறி அழுகின்றனர்.
வீடியோ:
திருமண விருந்தில் அனைவரும் பந்தியில் சாப்பாட்டு மட்டும் தான் பரிமாறப்படுவர்கள் ஆனால் ஐதராபாத்தில் திருமண விருந்தில் அனைவரும் பந்தியில் தங்கத்தில் ஆன உணவு தயாரித்து வியப்படைய வைத்து சமயைல் கலைஞா். you tube-வில் வைரலாக பரவிவரும் வீடியோ.
சாதத்தில் தங்க நிற இலைகள் போர்த்தி எடுக்கும் போது சாப்பாட்டின் சூட்டில் உருகி தங்க உணவாக மாறுகிறது, இதுவே தங்க உணவின் ரகசியம் .
இந்த தங்க உணவு செரிமானப் பகுதியில் உறிஞ்சப்படாததால் சாப்பிடுவதற்கு சுவையற்றது மற்றும் தீங்கில்லாததாகும். இது வழக்கமான விலையை விட ரூ.250 முதல் 300 வரை அதிகமாகும்.
தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் மீது பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் முக்கிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மொபைல் இன்டர்நெட் சேவைகள் 72 மணி நேரத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளன.
குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஈடுபடாமல் மக்கள் அமைதி காக்க வேண்டும் என சாமியார் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் மீது பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது.
சமிபத்தில் நடந்த ட்விட்டர் உரையாடல் ஒன்றின் மூலம் விராட் கோலி மற்றும் ஹர்பஜன் சிங் இடையேயான நட்பு குறித்து இருத்த குழப்பங்கள் தீர்ந்துள்ளது.
தற்போது இந்திய அணியிலப் இருந்து ஓய்வுபெற்ற ஹர்பஜன், இந்திய கேப்டன் கோலியிடம் சிறப்பு பரிசுக்கு ஒன்றை வினவியுள்ளார்
கோலி சமீபத்தில் ஒரு புதிய ஒலிபெருக்கி வாங்கியுள்ளார், அதனை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார், இந்த வீடியோவிற்கு பதிலளித்த ஹர்பஜன் சிங் தனக்கும் ஒன்று அனுப்புமாறு செல்ல வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளது:-
சொத்து குவிப்பு வழக்கில் சிறைக்குள் தண்டனை பெற்று வரும் சசிகலாவும், இளவரசியும் சாதாரண உடையில் வலம் வரும் புதிய வீடியோ ஆதாரத்தை சிறைத்துறை முன்னாள் டிஐஜி ரூபா, லஞ்ச ஒழிப்பு துறையிடம் ஒப்படைத்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கர்நாடக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். முன்னதாக சிறையில் சசிகலாவுக்கு பல வசதிகள் செய்து கொடுக்கப் பட்டுள்ளது எனவும், மேலும் கைதிக்கான உடையை அணியாமல் சாதரான உடையில் சசிகலா வலம் வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.
பீகாரில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் தாய், மகள் அடித்து செல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
உ.பி., மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் பார்களில் நடனமாடும் பெண்களின் நடன நிகழ்ச்சி நடத்தப்பட்டதை தனியார் தொலைக்காட்சி அம்பலப்படுத்தியுள்ளது.
பள்ளி முடிந்து மாணவர்கள் சென்றதும் காலியாக இருக்கும் பள்ளியை பாராக மற்றியுள்ளனர். இரவு நேரத்தில் உள்ளூர் ஆசாமிகள் சிலர் சேர்ந்து பள்ளியில் பார் அழகிகளை அழைத்து வந்து குத்தாட்டம் போட வைக்கின்றனர். அந்தப் பெண்களோடு சேர்ந்து அவர்களும் ஆட்டம் போடுகின்றனர்.
இந்த அட்டூழியத்தை அம்பலப்படுத்தும் வீடியோ ஒரு தனியார் தொலைக்காட்சியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் சரக்கு லாரியை நடு ரோட்டில் மறித்து உருளைக்கிழங்குகளை லாரியிலிருந்து எடுத்துத்தின்ற யானை.
மேற்கு வங்க மாநிலத்தில் மேற்கு மிட்னாபூரில் உள்ள தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள வனத்திலிருந்து வந்த யானை ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரியை நிறுத்தியது.
பின்னர், அந்த லாரியில் இருந்த உருளைக்கிழங்குகளை தும்பிக்கையால் எடுத்து அந்த யானை தின்றுள்ளது. இதனை அப்பகுதியில் இருந்த ஒருவர் வீடியோவாக பதிவுசெய்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டுள்ளார்.
வீடியோ பார்க்க:-
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறைக்குள் சுடிதார் அணிந்து கொண்டு சுற்றி வரும் மற்றொரு வீடியோ வெளியாகி மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கர்நாடக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் சசிகலாவுக்கு பல வசதிகள் செய்து கொடுக்கப் பட்டுள்ளது எனவும், மேலும் கைதிக்கான உடையை அணியாமல் சாதரான உடையில் சசிகலா வலம் வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறைக்குள் நைட்டியுடன் சுற்றி வந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கர்நாடக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
ரெயில்வேக்கு சொந்தமான ஓட்டல்களை குத்தகைக்கு விட்டதில் நடந்த முறைகேடு தொடர்பாக லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது சிபிஐ எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளது. இந்த லிஸ்டில் பீகார் மாநில துணை முதல்-மந்திரியும், லாலுவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் பெயரும் இடம் பெற்று உள்ளது.
இதனால் எதிர்க்கட்சியான பா.ஜனதா மற்றும் அதனுடைய கூட்டணி கட்சிகள் தேஜஸ்வி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், பத்திரிக்கையாளரை சந்திப்பின் போது, பீகார் துணை முதல்-மந்திரி தேஜாஸ்வியின் பாதுகாப்பு அதிகாரிகள் செய்தியாளர் ஒருவரை தாக்கி உள்ளனர். அந்த வீடியோவை பார்க்கவும்.
இன்று டெல்லி சட்டசபை கூட்டத்திற்கு வந்த கபில் மிஸ்ராவை அங்கிருந்த ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் சிலர் சுற்றி வளைத்து அடித்து உதைத்தனர். இச்சம்பவம் மிகுந்த பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையலான அரசு செயல்பட்டு வருகிறது. அண்மையில் ஆம் ஆத்மி கட்சியின் மந்திரியாக இருந்த கபில் மிஸ்ராவை கட்சியில் இருந்தும், மந்திரி பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.
டெல்லியில் பிறந்து சற்று நேரம் ஆன குழந்தை நடை பழகும் அழகு காட்சி வைரலாக பரவி வருகின்றது.
டெல்லியில் ஒரு தம்பதிக்கு பிறந்த குழந்தையை நர்ஸ் உதவியுடன் திடீரென அந்த குழந்தை நடக்க முயற்சித்துள்ளது. இதுகுறித்த வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த காட்சி பார்ப்பவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பொதுவாக ஒரு குழந்தை பிறந்து சில மாதங்கள் கடந்த பின்புதான் படிப்படியாக நடக்க ஆரம்பிக்கும்.
வீடியோ:
திருமாவளவன், ஸ்டாலின், அன்புமணி, சீமான் உள்ளிட்ட நல்ல தலைவர்கள் தமிழகத்தில் உள்ளனர். ஆனால், ஜனநாயகம் சரியில்லை. என்று ரஜினிகாந்த் இன்று ரசிகர்கள் சந்திப்பில் கூறினார்.
கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் 5-வது நாளாக ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து வருகிறார். கடைசி நாளான இன்று திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கிறார்.
ரசிகர்களை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும், முதல் நாளன்று நான் பேசிய பேச்சு இவ்வளவு சர்ச்சைக்குரியதாகும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் ரஜினிகாந்த் கூறினார்.
கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் 5-வது நாளாக ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து வருகிறார். கடைசி நாளான இன்று திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்கிறார்.
ரசிகர்களை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தருவதாகவும், முதல் நாளன்று நான் பேசிய பேச்சு இவ்வளவு சர்ச்சைக்குரியதாகும் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் ரஜினிகாந்த் கூறினார்.
தான் பிறந்தது கர்நாடகாவில் இருந்தாலும், 44 ஆண்டுகளாக தமிழகத்தில் வாழ்வதால் தான் பச்சைத் தமிழன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 8 வருடங்களுக்கு பிறகு தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுப்பதாக கடந்த மாதம் அறிவித்திருந்தார். ஆனால், திடீரென அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மே 15-ம் தேதி முதல் தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுப்பதாக அறிவித்திருந்தார். இதையடுத்து அவரது ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர்.
இன்று காலை 8 மணி முதல் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் ராகவேந்திர மண்டபத்துக்கு வரத் தொடங்கினர். ரஜினியுடன் போட்டோ எடுப்பதற்கு அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டு]ள்ளது.
இன்று சூப்பர் ஸ்டார் ரஜினி அவரது ரசிகர்களை கோடம்பாக்கத்தில் சந்தித்து புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி துவங்கியது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பல வருடங்களுக்கு பின் ரசிகர்களை நேரில் சந்தித்தார். ரசிகர்களின் விருப்பப்படி கடந்த எப்ரல் மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினி அவரது ரசிகர்களை சந்திக்க முடிவு செய்தார். இதற்காக ஏற்பாடுகள், ஆலோசனை கூட்டம் நடந்தது.
குடியிருப்பு பகுதியில் திறந்த சாராய கடையை மூடச்சொல்லி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்.
அயப்பாக்கம் குடியிருப்பு பகுதியில் திறந்த சாராய கடையை மூடச்சொல்லி மக்கள் திரள் போராட்டத்தில் அம்பத்தூர், ஆவடியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியினர் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வீடியோவை பார்க்கவும்:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.