குர்மித் ராம் பலாத்கார வழக்கு : 201 ரயில்கள் ரத்து - முழு பட்டியல் பார்க்க

Last Updated : Aug 25, 2017, 09:53 AM IST
குர்மித் ராம் பலாத்கார வழக்கு : 201 ரயில்கள் ரத்து - முழு பட்டியல் பார்க்க title=

தேரா சச்சா சவுதா என்ற ஆன்மிக அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம் சிங் மீது பெண் சீடர்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. குர்மீத் ராம் ரஹீம் சிங் மீதான பாலியல் பலாத்கார வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களில் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். மேலும் முக்கிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மொபைல் இன்டர்நெட் சேவைகள் 72 மணி நேரத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இந்நிலையில், ஹரியானா, பஞ்சாப், சண்டிகர் ஆகிய மாநிலங்களுக்கு செல்லும் 201 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதில் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 92,  109 பயணிகளின் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன் முழு பட்டியல் பார்ர்கவும்.

 

 

 

 

 

 

Trending News