சசிகலா சிறைக்குள் நைட்டியுடன் சுற்றி வந்த வீடியோ வெளியானது

Last Updated : Jul 18, 2017, 02:29 PM IST
சசிகலா சிறைக்குள் நைட்டியுடன் சுற்றி வந்த வீடியோ வெளியானது title=

சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று வரும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா சிறைக்குள் நைட்டியுடன் சுற்றி வந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்ட  சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர் கர்நாடக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் திடீர் சோதனை நடத்திய சிறைத்துறை டிஐஜி ரூபா, ஜெயிலில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுத்திருப்பதும், அதற்காக கர்நாடக சிறைத்துறை டிஜிபி சத்ய நாராயணாவுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக சோதனையின் போது சிரை அதிகாரிகள் கூறியதாக தெரிவித்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொட்ரபாக விசாரணை நடத்த கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட்டார். 

இந்நிலையில், தற்போது பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் சசிகலா நைட்டியுடன் வலம் வருவதும், சிறையில் சசிகலாவுக்கு உள்ள வசதிகளும் அந்த வீடியோவில் சுட்டிக்காட்டப்படுகிறது. 

மேலும் டிஜிபி சத்ய நாராயணா மற்றும் டிஐஜி ரூபாவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ:- 

Trending News