இலங்கைக்கு செல்லும் ரஜினிகாந்த்! ஏன் தெரியுமா ?

Last Updated : Mar 23, 2017, 01:19 PM IST
இலங்கைக்கு செல்லும் ரஜினிகாந்த்! ஏன் தெரியுமா ? title=

லைகா நிறுவனம் தயாரிபில், ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் “2.0” படத்தில் நடித்துவருகிறார். இப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. 

இந்நிலையில், இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு லைகா நிறுவனத்தின் சார்பில் 150 புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளை மக்களுக்கு தருவதற்காக இலங்கையில் அடுத்த மாதம் ஏப்ரல் 9-ம் தேதி ஒரு நிகழ்ச்சி நடத்தவுள்ளனர்.

அதில் கலந்துகொள்ள சூப்பர்ஸ்டாருக்கு அழைப்பு விடுத்தனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்று வீடுகளை வழங்க உள்ளார். 

ஈழத்தமிழர்களுக்கான நிகழ்ச்சி என்பதால் ரஜினிகாந்த சற்றும் யோசிக்காமல் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறேன் என உறுதியளித்துள்ளார்.

இந்த நிகழ்ச்சி இலங்கையில் நடப்பதால் இலங்கை வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்டபல முக்கிய அரசியல் பிரமுகர்கள் இதில் கலந்துகொள்வார்கள் என தெரிகிறது

Trending News