கங்கையை சுத்தப்படுத்த ரூ.2 ஆயிரத்து 154 கோடியே 28 லட்சம் ஒதுக்கீடு.
கழிவுநீர், குப்பை போன்றவற்றால் மாசடைந்துள்ள கங்கை நதியை சுத்தப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கங்கையை தூய்மைப்படுத்துவதற்காக மத்திய அரசு தேசிய திட்ட அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி உள்ளது.
கங்கையை சுத்தப்படுத்தும் 26 திட்டங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 154 கோடியே 28 லட்சம் ஒதுக்கீடு செய்து இந்த அமைப்பு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.
ஹைட்ரோ கார்பன் விவகாரத்தில் மத்திய அரசு இரட்டை வேடம் போடுகிறது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-
தமிழக சட்டசபையின் நிதிநிலை அறிக்கை விவாதத்தின் போது, ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு எப்படி தமிழக சட்டசபையில் ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றினோமோ, அதேபோல் இந்த பிரச்னைக்கும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று திமுக சார்பில் நான் கோரிக்கை விடுத்தேன்.
நெடுவாசல், காரைக்கால் உட்பட நிலப்பகுதியில் 23, கடல் பகுதியில் 8 என 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க நேற்று டெல்லியில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஒப்பந்ததாரர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் அமைச்சர் தர்மேந்திர பிரதான். பிறகு அவர்களுக்கு அரசு அனைத்து ஒத்துழைப்பும் அளிக்கும் எனவும் உறுதி அளித்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கூறியதாவது:-
மிழக விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவேன் என வைகோ தெரிவித்துள்ளார்.
டெல்லியில் அறவழியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகளை நேற்று ஞாயிற்று கிழமை(26 மார்ச்) காலை வைகோ நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். ஜந்தர் மந்தரில் விவசாயிகளோடு அமர்ந்து வைகோ போராட்டத்தில் ஈடுபட்டார்.
தமிழகம் திரும்பிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறியதாவது:-
அனைத்துக்கட்சிகள், பொதுமக்களின் எதிர்ப்புகளை மீறி, நெடுவாசல் மற்றும் காரைக்காலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் மக்களின் சந்தேகங்களை தீர்த்த பிறகு தான் தமிழகத்தின் நெடுவாசல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் நிறைவேற்றப்படும் என மத்திய பெட்ரோலியத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டதாவது:-
தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக மத்திய அரசு ரூ.1,748.28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன்
தமிழகத்தில் பருவமழை போதிய அளவு பெய்யாததால் கடந்த 100 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. அணைகள் வறண்டு விவசாயம் பொய்த்து விட்டது. இதனால் விவசாயிகள் சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து ரூ.39 ஆயிரத்து 565 கோடி வழங்கவேண்டும் தமிழக அரசு சார்பில் கேட்டுகொள்ளப்பட்டது
தமிழகத்தில் வறட்சி பாதித்த பகுதிகளை நேரில் வந்து ஆய்வு செய்த மத்தியக் குழு, வறட்சி நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.2,096 கோடி வழங்க மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
தேசிய செயற்குழுவின் துணை கமிட்டியோ ரூ.1,748.28 கோடி மட்டுமே தர பரிந்துரை செய்துள்ளது. தமிழகத்திற்கு வறட்சி நிவாரணமாக மத்திய அரசிடம் ரூ.39,565 கோடி வழங்க வேண்டும் என மாநில அரசு சார்பில் கேட்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் துவங்கியது. இதில் ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு நிதி ஒதுக்கவும் மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீத அகவிலைப்படி வழங்கிட ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்த அகவிலைப்படி உயர்வு 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வால் 48.85 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 55.51லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர்.
நாடு முழுவதும் தேர்வு செய்யப்படும் 100 ஸ்மார்ட் நகரங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு வீட்டு வாடகை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க வழிமுறையை வகுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
விவசாயகளின் தற்கொலைக்கு வழங்கப்படும் இழப்பீட்டை முறைப்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
ரூ.70 ஆயிரம் கோடி கறுப்புப்பணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழுவின் துணைத்தலைவர் அரிஜித் பசாயத் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
வங்கிகளில் கணக்கு வைத்திருப்போர் கட்டாயம் ஆதார் எண் பதிவது செய்ய வேண்டும் என்று மத்திய அரசு கூறிவருகிறது.
நாடு முழுவதும் இதுவரை, 112 கோடி பேருக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளது. அதில் மொத்தம் 40 கோடி வங்கிக்கணக்குகளில் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளன. சுமார் 2 கோடி பேர் ஒவ்வொரு மாதமும் தங்கள் ஆதார் எண்ணை வங்கி கணக்குகளில் இணைத்து வருகின்றனர்.
மேலும், டிஜிட்டல் பணப்பரிமாற்றத்திற்கு ஏற்ற வகையில், பேடிஎம், ஏர்டெல், இந்தியா போஸ்ட் ஆகியவைகளின் மூலம் பேமெண்ட் பேங்க் உருவாக்கப்பட்டுள்ளது. ஏர்டெல் பேமெண்ட் பேங்க் கடந்த நவம்பர் மாதம் முதல் கட்டமாக துவங்கப்பட்டது.
பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் வேலைவாய்ப்பு விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
விவரங்களை பார்ப்போம்:-
அடுத்த ஆண்டுக்குள் மத்திய அரசில் புதிதாக 2 லட்சத்து 83 ஆயிரம் பணி இடங்கள் உருவாக்கப்படும். இதன்மூலம் மத்திய அரசு ஊழியர்கள் எண்ணிக்கை 35 லட்சத்து 67 ஆயிரமாக உயரும்.
மத்திய உள்துறை அமைச்சகத்தில் புதிதாக 6 ஆயிரத்து 76 பேர் சேர்க்கப்படுவர். அதன்பின்னர் உள்துறை அமைச்சக பணியாளர் எண்ணிக்கை 24 ஆயிரத்து 778 ஆக அதிகரிக்கும்.
ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு மத்திய அரசு உயரிய விருதான பத்மஸ்ரீ, பத்மவிபூசன், பத்மபூசன் விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2016-ம் ஆண்டிற்கான பத்ம ஸ்ரீ விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசால் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளவர்களின் விவரங்கள் பின்வருமாறு:-
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவதற்கு ஒரிரு நாட்களில் அவசர சட்டம் கொண்டு வரப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லியில் இன்று அறிவித்தார்.
மத்திய அரசின் அறிவுரைக்கு பிறகே பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளுக்கு தடை விதிக்க பரிந்துரை செய்யப்பட்டது என்று பார்லிமென்ட் குழுவிடம் ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்து உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.