காவிரி நீர் பங்கீடு பிரச்சினை தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு கர்நாடகம், தமிழகம் ஆகிய இரு மாநிலங்களில் காவிரி படுகையில் உள்ள அணைகளில் நீர் இருப்பு, நீர்வரத்து ஆகியவை குறித்த உண்மை நிலவரத்தை கண்டறிய நிபுணர்கள் குழுவை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. அத்துடன் அந்த குழு 17-ம் தேதிக்குள் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான உத்தரவை சுப்ரீம் கோர்ட்டு தற்போது நிறுத்தி வைத்துள்ளது. தமிழகத்துக்கு கர்நாடகம் 7-ம் தேதி முதல் 1அடுத்த 2 நாட்கள் தண்ணீர் தரவும் உத்தரவிட்டது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
செப்.30-ம் தேதி காவிரி தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டுக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் அக்டோபர் 4-ம் தேதிக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான குழுவில் இடம்பெற்ற நிபுணர்கள் காவிரி நீர்ப்பாசனப் பகுதியை முழுமையாக ஆராய்ந்து வரும் 6-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்" என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
லோக்சபாவில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், விலைவாசி உயர்வு தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசை விமர்சித்து பேசினார். இதற்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பதிலடி கொடுத்தார்.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு 7-வது சம்பள கமிஷன், தனது சிபாரிசுகளை கடந்த நவம்பர் மாதம் மத்திய அரசிடம் சமர்ப்பித்தது.
சர்ச்சையில் சிக்கியுள்ள முஸ்லீம் மதபோதகர் ஜாகீர் நாயக்கால் ஏற்படுத்தப்பட்ட இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளை என்ற தன்னார்வ அமைப்புக்கு கிடைக்கும் நிதியுதவி குறித்து மத்திய அரசு விசாரணை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி மோடி அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்ட அமைச்சர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.
விவரங்கள் வருமாறு:-
> பிரகாஷ் ஜவடேகர் கேபினட் அமைச்சராக பதவியேற்பு
> எஸ்.எஸ்.அலுவாலியா அமைச்சரவையில் சேர்ப்பு
> அர்ஜூன் ராம் மேக்வால்- அமைச்சரவையில் சேர்ப்பு
> ஃபாகன் சிங் குஸ்தே- இணை அமைச்சராக பொறுப்பேற்பு
நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்டம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு, மத்திய சட்டதுறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பி உள்ளது.
நாடு முழுவதும் ஒரே மாதிரியான சட்ட விதிமுறைகளை அமல்படுத்துவதில் உள்ள சாதக மற்றும் பாதகங்களை யுசிசி ஆய்வு செய்து வருகிறது. நாடு முழுவதற்கும் பொருந்தும் வகையிலான சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக அறிக்கை அளிக்க மத்திய சட்ட குழுவிற்கும் அரசு கடிதம் எழுதி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.