விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க வழிமுறையை வகுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
விவசாயகளின் தற்கொலைக்கு வழங்கப்படும் இழப்பீட்டை முறைப்படுத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், விவசாயிகளின் தற்கொலையை தடுக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் தற்கொலையை தடுக்க வழிமுறையை வகுக்க வேண்டும். இழப்பீடு வழங்குவது மட்டும் விவசாயிகள் பிரச்னைக்கு தீர்வாகாது எனக்கூறியுள்ளது. மேலும் இது தொடர்பாகமத்திய அரசு பதிலளிக்க 2 வார கால அவகாசம் வழங்கி இந்த மாதம் 27-ம் தேதிக்கு வழக்கை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.