பொங்கல் விடுமுறை ரத்து இல்லை- பொன். ராதாகிருஷ்ணன்

கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் விடுமுறை நீக்கம் செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

Last Updated : Jan 10, 2018, 02:01 PM IST
பொங்கல் விடுமுறை ரத்து இல்லை- பொன். ராதாகிருஷ்ணன்  title=

சென்னை: கட்டாய விடுமுறை பட்டியலில் இருந்து பொங்கல் விடுமுறை நீக்கம் செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

பொங்கல் விடுமுறை குறித்து எழுந்த குழப்பங்களுக்கு பதிலளித்து பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்:-

விடுமுறை தினங்கள் 4 வகையாக பிரிக்கப்படுகிறது. தேசம் முழுவதும் கொண்டாடுவது, சில மாநிலங்களில் மட்டுமே கொண்டாடுவது, மாநிலத்தில் மட்டுமே கொண்டாடுவது, மாவட்டங்களுக்குள் கொண்டாடுவது. 

மத்திய அரசின் கட்டாய விடுமுறை நாட்கள் 14. அதில் அனைவருக்கும் பொதுவானது-3, முஸ்லிம் பண்டிகை-4, இந்துக்கள் பண்டிகை-2, கிறிஸ்தவர்கள் பண்டிகை-2, புத்த மதம், ஜெயின்,  சீக்கியர்கள் பண்டிகை தலா ஒன்று.

அந்த விடுமுறை நாட்கள் குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, மிலாதுநபி, மொஹரம், பக்ரீத், ரம்ஜான், புனிதவெள்ளி, கிறிஸ்துமஸ், விஜயதசமி, தீபாவளி, புத்த பூர்ணிமா, குருநானக் ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி.

இது தவிர விருப்ப விடுமுறை விழாக்களாக 12 விழாக்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ஹோலி பண்டிகை,  ஜன்மாஷ்டமி, ராம நவமி, சிவராத்திரி, விநாயகர் சதுர்த்தி, பொங்கல், ஓணம், மகரசங்கராந்தி, தசராவுக்கு மேலும் ஒருநாள் விசு, பஞ்சமி உள்ளிட்ட விழாக்கள்.

இந்த விடுமுறை பட்டியல் மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் வெளியிடப்படும். அப்போது ஒவ்வொரு விழாக்களும் எந்த மாதம், என்ன தேதியில், என்ன கிழமையில் வருகிறது என தெளிவாக 
குறிப்பிடப்பட்டிருக்கும். அதன்படி இந்த ஆண்டுக்கான விடுமுறை பட்டியலும் கடந்த ஜூன் மாதம் 
வெளியிடப்பட்டுவிட்டது.

இந்த விடுமுறை நாட்கள் எவை என்பதை ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் மத்திய அரசு ஊழியர்கள் நல ஒருங்கிணைப்பு கமிட்டி முடிவு செய்யும்.

இந்த கமிட்டி எந்த விழாக்களுக்கு விடுமுறை எடுத்துக்கொள்ள முடிவு செய்கிறதோ அந்த நாள் விடுமுறை நாளாக அறிவிக்கப்படும்.

ஒரே நாளில் இரண்டு பண்டிகை வந்தால் அதற்காக இன்னொரு நாளில் விடுமுறை எடுக்க முடியாது. அதே போல் விடுமுறை நாளில் பண்டிகை தினம் வந்தால் இன்னொரு நாள் அந்த விடுமுறையை எடுக்க முடியாது.

சிறப்பு விடுமுறை நாட்களாக ஒருங்கிணைப்பு கமிட்டி முடிவு செய்யும் நாட்களில் மத்திய அரசு தலையிட முடியாது. இதில் மத்திய அரசுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

இந்த ஆண்டு பொங்கல் விழா 2-வது சனிக்கிழமை வருகிறது. பொதுவாக 2-வது சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் ஒருங்கிணைப்பு கமிட்டி அந்த நாளை விடுமுறை நாளாக தேர்வு செய்யவில்லை. மற்றொரு நாளில் விடுமுறை எடுத்துக்கொள்ள ஊழியர் சங்கம் முடிவு செய்து இருக்கிறது.

எனவே பொங்கல் தின விடுமுறையை மத்திய அரசு ரத்து செய்துவிட்டது என்று தவறான செய்தியை மக்களுக்கு கொடுப்பது வருத்த மளிக்கிறது. இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Trending News