Symptoms of Vitamin B12 Deficiency: உடல் ஆரோக்கியமாக இருக்க அனைத்து வகையான ஊட்டச்சத்துகளும் தேவைப்படுகின்றன. இவற்றில், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கால்சியம் ஆகியவை அடங்கும். வைட்டமின் பி12 இவற்றில் மிக முக்கியமான வைட்டமின் ஆகும். இதன் குறைபாடு மனிதர்களை கடுமையாக பாதிக்கும். வைட்டமின் பி12 இன் முக்கியமான செயல்பாடு உடலில் இரத்த சிவப்பணுக்களை அதிகரிப்பதாகும். இந்த வைட்டமின் குறைபாட்டால், உடலில் ஆக்ஸிஜன் சப்ளை குறைகிறது.
ஆகையால் உடலில் இந்த வைட்டமின் குறைபாடு எப்போது ஏற்படுகின்றது என்பதை சரியாக புரிந்துகொள்வது அவசியம். வைட்டமின் பி12 குறைபாடு ஏற்பட்டால், உடலில் சில அறிகுறிகள் தோன்றும். அவற்றை பற்றி இங்கே காணலாம்.
வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறிகள்
மனநிலையில் மாற்றம்
அதிக கோபம், எரிச்சல், மனச்சோர்வு ஆகியவையும் உடலில் வைட்டமின் பி12 குறைந்துள்ளது என்பதற்கான அறிகுறிகளாகும். மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வின் மூலமும் இதை கண்டறியலாம்.
இதயத் துடிப்பு
நடைபயிற்சி செய்யும்போது, படிக்கட்டுகளில் ஏறிய பிறகு மூச்சுத் திணறல் ஏற்பட்டாலோ அல்லது இதயத் துடிப்பு இயல்பை விட வேகமாக இருந்தாலோ அவை இந்த குறைபாட்டின் அறிகுறிகளாக்க இருக்கலாம். இப்படி இருப்பவர்கள் இதை தீவிரமாக எடுத்து மருத்துவரை அணுக வேண்டும்.
உடல் பலவீனம்
உடலில் வலிமை இல்லாமை, பலவீனம் அல்லது வேலை செய்ய முடியாமல் சோர்வாக இருப்பது போன்றவை வைட்டமின் பி-12 குறைபாட்டின் அறிகுறிகளாக கருதப்படுகின்றன. இது ஒரு பொதுவான அறிகுறியாகும். பல வித பிரச்சனைகளுக்கு இந்த அறிகுறிகள் காணப்படுகின்றன.
மேலும் படிக்க | நெய் vs ஆலிவ் எண்ணெய்... இரண்டில் எது பெஸ்ட்.... நிபுணர் கூறுவது என்ன
கண்களில் பிரச்சனை
மங்கலான பார்வை, பார்வை குறைதல் மற்றும் கண்ணின் கீழ் பகுதியில் நிறமாற்றம் போன்ற பார்வை பிரச்சினைகள் இருந்தால், அவை வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். கண்களில் வறட்சி ஏற்படுவதும் இதற்கான ஒரு அறிகுறியாக பார்க்கப்படுகின்றது.
தோல் நிறத்தில் மாற்றம்
கண்கள் மற்றும் தோலின் நிறம் மஞ்சளாக மாறுவதும் உடலில் வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறியாகும். சருமத்தின் உலர் தன்மையும் இந்த குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.
ஞாபக மறதி
உடலில் வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால், ஞாபக மறதி ஏற்படுகின்றது. அன்றாட வாழ்க்கையில் முக்கியமான விஷயங்களை மறப்பது, பொருட்களை எங்காவது வைத்துவிட்டு மறப்பது ஆகியவை இதற்கான உதாரணங்களாகும்.
எலும்புகள் மற்றும் தசைகளில் வலி
தொடர்ந்து எலும்புகள் மற்றும் தசைகளில் வலி அல்லது சிரமம் இருந்தால், அதை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டும். இவை வைட்டமின் பி12 குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | குடல் பிரச்சனை தீர்வு! இந்த 3 உணவுகள் சாபிட்டால் மலச்சிக்கல், வாயு இருக்காது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ