மணிப்பூர் சட்டசபை தேர்தல் மார்ச் 4-ம் மற்றும் 8-ம் தேதிகளில் நடக்க உள்ளது. இதில் போட்டியிடும் பா.ஜ.க., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் மோடி இன்று மணிப்பூர் செல்ல உள்ளார்.
பிரதமரின் இந்த பயணத்துக்கு அங்குள்ள புரட்சி அமைப்புக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பிரதமரின் வருகையை எதிர்த்து இன்று முழு அடைப்பு போராட்டம் நடத்த அழைப்பு விடுத்து உள்ளன. இதனால் மாநிலம் முழுவதும் பலத்த சோதனை நடத்தப்பட்டு வருகின்றன.
ஈஷா யோகா மையத்தில் அமைந்துள்ள 112 அடி உயர ஆதியோகி சிவனின் மார்பளவு சிலையை திறந்து வைக்க மோடி வருகிறார்.
கோவை அருகே வெள்ளிங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில், 112 அடி உயர ஆதியோகி சிவனின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டு உள்ளது. சிலையை திறந்து வைக்க தனி விமானத்தில் கோவைக்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளார். மாலையில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு பின்னர் டெல்லிக்கு உடனடியாக புறப்படுகிறார். விமானநிலையத்தில் பிரதமர் மோடியை தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவ், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்கிறார்கள்.
நாட்டின் 68-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்!!!
இன்று நாடு முழுவதும் 68-வது குடியரசு தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட இருக்கிறது.
குடியரசுதின விழாவை முன்னிட்டு டெல்லியில் உள்ள அமர்ஜவான் ஜோதியில் பிரதமர் மோடி மரியாதை மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினார். ராணுவ வீரர்களின் பாரம்பரிய இசை முழங்கப்பட்டது.
பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இன்று நாட்டின் 68_வது குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பிரதமர் மோடி சமுக வலைத்தளம் மூலமாக நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
டுவிட்டரில் அவர் வாழ்த்து பதிவில் கூறியதாவது:- அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசி மூலமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் நேற்று இரவு பேசினார். இதனை வெள்ளை மாளிகை வட்டாரங்கள் உறுதி படுத்தின.
அமெரிக்காவின் 45-வது அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த 20-ம் தேதி பதவியேற்றார். பதவியேற்ற நான்காவது நாளான நேற்று இரவு இந்திய பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு:-
அமெரிக்காவின் புதிய அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசி மூலமாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று இரவு பேசுகிறார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொலைபேசி வாயிலாக இந்திய பிரதமர் மோடியுடன் இன்று உரையாட இருப்பதாக வெள்ளை மாளிகையிலிருந்து தகவல் கிடைத்துள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்தியில் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு:- இந்திய நேரப்படி இன்று இரவு 11.30 மணியளவில் அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்திய பிரதமர் மோடியுடன் உரையாட இருக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராட்டத்தில் பங்கேற்று வருகின்றனர். தமிழர்களின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் அழிக்க துடிக்கும் பீட்டா போன்ற அமைப்புகளை இந்தியா முழுவதும் தடை செய்ய வேண்டும். ஜல்லிகட்டு என்பது தமிழர்களின் வீரம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு சார்ந்தது மட்டுமல்லாது அறிவியல் சார்ந்ததும் கூட என்று ஜல்லிகட்டிற்கான ஆதரவுகளை அளித்து வருகின்றனர்.
நேற்று தமிழகம் மற்றும் புதுவையிலும் முழுஅடைப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
சஹாரா-பிர்லா குழுமத்திடம் இருந்து பிரதமர் மோடி மற்றும் மற்ற அரசியல் வாதிகள் லஞ்சம் வாங்கியதாகத் தொடரப்பட்டுள்ள வழக்கில், உரிய ஆதாரம் சமர்ப்பிக்கப்படாததால், அவர்களிடம் விசாரணை நடத்த முடியாது என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.
கடந்த 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் சஹாரா-பிர்லா குழுமத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் எனக் கூறி, சில ஆவணங்களையும் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
அதில், பிரதமர் மோடி உள்ளிட்ட சில அரசியல்வாதிகளின் பெயர் இடம்பெற்றிருப்பதாகக் குற்றம்சாட்ட பட்டார்கள்.
பிரதமர் மோடி மற்றும் முதல்வர் நிதிஷ்குமார் ஒருவருக்கொருவர் பாராட்டுக்கொண்டார்கள்
பீஹாரில் மதுவிலக்கு கொண்டு வந்ததற்காக முதல்வர் நிதிஷ்குமாரை பிரதமர் மோடி பாராட்டினார்.பாட்னாவில் சீக்கிய மத குரு கோவிந்த் சிங் பிறந்த நாளை கொண்டாட்டத்தை முன்னிட்டு விழா நடந்தது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
அப்பொழுது அவர் பேசியதாவது:-
நேற்று தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி பல புதிய சலுகைகளை அறிவித்தார்.
தொலைக்காட்சியில் அவர் கூறியதாவது:-
உயர் மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் ஒழிப்பு நடவடிக்கையால் மக்களுக்கு பெரும் கஷ்டங்கள் ஏற்பட்டதை நான் அறிந்துள்ளேன். ஆனால் 125 கோடி மக்களும் நேர்மையாக வும், உண்மையாகவும் இருந்து அரசின் நடவடிக்கைக்கு ஆதரவு அளித்து வருவதுக்கு நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கூறினார்.
அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும், நலமும் பொங்கட்டும் என புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி
பிரதமர் மோடி நாட்டு மக்கள் அனைவருக்கும் 2017 புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில் பிறந்துள்ள இந்த 2017-ம் ஆண்டில் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த ஆண்டு அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும், நல்ல ஆரோக்கியமும் அமைந்திடும் வகையில் இருக்க வாழ்த்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
புதுடெல்லி: செல்லாததாக அறிவிக்கப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் புதிதாக ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் வெளியிடப்படும் என்றும் கடந்த மாதம் 8-ம் தேதி பிரதமர் மோடி அறிவித்தார்.
அதன்படி, புதிய 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டு உள்ளன. செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வங்கிகணக்கில் டெபாசிட் செய்து மாற்றிக் கொள்வதற்கு மத்திய அரசு அவகாசம் வழங்கியது.
ராகுல் காந்தி பேசினால் இப்போதைக்கு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இல்லை பிரதமர் மோடி பதிலடி.
சில நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தி கூறியதாவது:- பார்லிமெண்டில் என்னை பேச அனுமதித்தால் பூகம்பம் ஏற்படும் என்று கூறியிருந்தார். அதற்கு பதிலடி தரும் வகையில் வாரணாசி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது:-
உ.பி., மாநிலத்தில் அடுத்த வருடம் தேர்தல் நடைபெற உள்ளது. அதையடுத்து கான்பூரில் நடந்த பொது கூட்டத்தில் கலந்து கொண்டு நரேந்தர மோடி பேசினார்.
அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.