ராகுல் காந்தி பேசினால் இப்போதைக்கு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இல்லை பிரதமர் மோடி பதிலடி.
சில நாட்களுக்கு முன்பு ராகுல் காந்தி கூறியதாவது:- பார்லிமெண்டில் என்னை பேச அனுமதித்தால் பூகம்பம் ஏற்படும் என்று கூறியிருந்தார். அதற்கு பதிலடி தரும் வகையில் வாரணாசி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது:-
இளம் தலைவரை அவர்கள் கொண்டுள்ளனர். எவ்வாறு பேச வேண்டும் என்று இளம் தலைவர் கற்றுகொண்டிருக்கிறார். எப்படி பேச வேண்டும் என்று அவர் பேசக்கற்றுக்கொள்ள துவங்கியதில் இருந்து நான் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளேன். கடந்த 10 ஆண்டுகளில் அவர் பேசியிருந்தால் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்க கூடும். ஆனால் இப்போது அவர் பேச தொடங்கிவிட்டார். ஆகையால், இப்போதைக்கு நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு இல்லை. அவர் பேசாமல் இருந்திருந்தால் நிலநடுக்கம் ஏற்பட்டிருக்கலாம்.
கருப்பு பண ஒழிப்பின் மூலம் இந்தியா தூய்மை அடையும். தற்போது நேர்மையான பாதையில் இந்தியா சென்று கொண்டிருக்கிறது. பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டபோது எனக்கு மக்கள் ஆதரவு அளித்துள்ளனர். கள்ள நோட்டு புழக்கத்திற்கு பாகிஸ்தான் துணை போகிறது. கருப்பு மற்றும் கள்ளப்பணம் ஒழிப்பு மிக சிரமமான காரியம். பெரும் சவாலாக உள்ளது. கருப்பு பணஒழிப்பில் இன்னும் மக்கள் எனக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் பேசினார்.
PM Modi arrives in Varanasi, will also interact with booth level BJP Karyakartas working in the Varanasi Lok Sabha seat pic.twitter.com/Vf6XkvvMmW
— ANI UP (@ANINewsUP) December 22, 2016
PM Modi arrives in Varanasi, will inaugurate a Trade Facilitation Centre & Crafts Museum & launch schemes, programmes of Textiles Ministry pic.twitter.com/MEaMnRbgXf
— ANI UP (@ANINewsUP) December 22, 2016