சுதந்திர தினத்தன்று உரையாற்றும் பிரதமர்கள் குண்டு துளைக்காத பாதுகாப்பு கூண்டிற்குள் இருந்தே தங்களின் உரையை நிகழ்த்துவதே மரபாக இருந்தது. ஆனால் பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, கடந்த 2 ஆண்டுகளாக திறந்து அரங்கிலேயே தனது சுதந்திர தின உரையை நிகழ்த்தினார்.
லோக்சபாவில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல், விலைவாசி உயர்வு தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய அரசை விமர்சித்து பேசினார். இதற்கு மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி பதிலடி கொடுத்தார்.
சமூக வலைதளங்கள் வாயிலாக கெஜ்ரிவால் பிரதமர் மோடி மீது பகிரங்க குற்றம்சாட்டியுள்ளார்.
டில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். இக்கட்சி சார்பில் தனது ஆதரவாளர்களுக்கு 10 நிமிட வீடியோ பதிவை சமூக வலைதளங்கள் வாயிலாக அனுப்பியுள்ளார் கெஜ்ரிவால் அதில் அவர் பேசியிருப்பதாவது:-
காஷ்மீரில் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதி புர்கான் வானி மீடியாக்களில் ஹீரோ போல் சித்தரிக்கப்படுவது குறித்து பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளார். காஷ்மீர் கலவரம் குறித்து பிரதமர் மோடி நேற்று மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது பிரதமர் மோடி கவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் வளர்ச்சியை 8 சதவிகிதத்திற்கு மேல் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்கா நாட்டின் ஜோகன்ஸ்பெர்க்கில், இந்திய வம்சாவளியினரிடையே பேசிய அவர், உலக பொருளாதாரம் மந்தமாக இருக்கிற போதிலும் இந்தியாவின் வளர்ச்சி 7 புள்ளி 6 சதவிகிதமாக இருப்பதாக தெரிவித்தார். வரும் ஆண்டுகளில் அதனை 8 சதவிகிதத்திற்கு மேல், அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மோடி குறிப்பிட்டார்.
மத்திய மந்திரிகளின் சபையை மாற்றி அமைப்பது குறித்து கடந்த சில வாரங்களாகவே பிரதமர் மோடி தீவிர ஆலோசனை நடத்தினார். கடந்த 30-ம் தேதி மோடி, இது தொடர்பாக மத்திய மந்திரி சபை கூட்டத்தில் விவாதிக்கவும் செய்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.