சஹாரா-பிர்லா வழக்கு: மோடியை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு

Last Updated : Jan 12, 2017, 08:28 AM IST
சஹாரா-பிர்லா வழக்கு: மோடியை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு title=

சஹாரா-பிர்லா குழுமத்திடம் இருந்து பிரதமர் மோடி மற்றும் மற்ற அரசியல் வாதிகள் லஞ்சம் வாங்கியதாகத் தொடரப்பட்டுள்ள வழக்கில், உரிய ஆதாரம் சமர்ப்பிக்கப்படாததால், அவர்களிடம் விசாரணை நடத்த முடியாது என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த 2013, 2014 ஆகிய ஆண்டுகளில் சஹாரா-பிர்லா குழுமத்தில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் எனக் கூறி, சில ஆவணங்களையும் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

அதில், பிரதமர் மோடி உள்ளிட்ட சில அரசியல்வாதிகளின் பெயர் இடம்பெற்றிருப்பதாகக் குற்றம்சாட்ட பட்டார்கள்.

இதுதொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. குற்றம்சாட்டியோர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் கோர்ட் மேற்பார்வையில் பிரதமர் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த கோரி அபிடவிட் தாக்கல் செய்தார்.

அரசு தரப்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் முகுல் ரோதேகி, ‘'பிரதமர் மோடிக்கு எதிரான லஞ்ச குற்றச்சாட்டில் அதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் சமர்பிக்கப்படவில்லை. இதுபோன்ற காகித ஆவணங்களை சட்டப்பூர்வ ஆதாரமாக ஏற்றால் நாட்டில் ஒருவரும் பாதுகாப்பாக இருக்க முடியாது'’ என்றார்.

இதையடுத்து, தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், ‘’குஜராத் முதல்வராக இருந்த போது, நரேந்திர மோடி உள்ளிட்ட சில அரசியல்வாதிகள் சகாரா குழுமத்திடம் இருந்து லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டி தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில் அதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் சமர்பிக்கப்படவில்லை. ஆதாரமற்ற இந்த வழக்கில் பிரதமர் மோடியை விசாரிக்க முடியாது,’’ எனக் குறிப்பிட்டுள்ளது.

Trending News