டொனால்ட் டிரம்ப் உத்தரவு மன வேதனை அளிக்கிறது- மலாலா யூசுப்சாய்

Last Updated : Jan 28, 2017, 04:18 PM IST
டொனால்ட் டிரம்ப் உத்தரவு மன வேதனை அளிக்கிறது- மலாலா யூசுப்சாய் title=

அமெரிக்காவில் வெளிநாட்டினர் மற்றும் அகதிகள் குடியேற்ற சட்டத்தில் மாற்றங்களை செய்து அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார். வெளிநாட்டினர் மற்றும் அகதிகள் குடியேற்றத்தை தடுக்க கட்டுப்பாடுகள் மற்றும் மாற்றங்களை விதித்து உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவின்படி சிரியா அகதிகளுக்கும் அனுமதி மறுக்கப்படுகிறது. இவை அமெரிக்காவில் தீவிரவாதிகள் உள்ளே நுழைய முடியாதபடி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தும் வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளை சேர்ந்த அகதிகள் அமெரிக்காவில் தங்குவதற்கு 4 மாதங்கள் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. அகதிகள் குறித்த விவரங்கள் முழுவதையும் விவரமாக தெரிந்து கொண்டு அதன்பின் அனுமதி வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அகதிகள் அமெரிக்காவில் தங்குவது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அகதிகள் குறித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் உத்தரவு தமக்கு மிகுந்த மன வேதனையை அளிப்பதாக, பாகிஸ்தானின் சமூக ஆர்வலரும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசுப் தெரிவித்துள்ளார்.

Trending News