இந்தியாவிடம் வலுவான ஆதாரங்களை கேட்கும் பாகிஸ்தான்

Last Updated : Feb 2, 2017, 01:45 PM IST
இந்தியாவிடம் வலுவான ஆதாரங்களை கேட்கும் பாகிஸ்தான் title=

ஹபீஸ் சயீத்துக்கு எதிராக இந்தியா வலுவான ஆதாரங்களை கொடுக்க வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை.

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவின்பேரில், செளபுர்ஜி மசூதியில் இருந்த ஹபீஸ் சயீதை லாகூர் போலீஸார் கடந்த திங்கள்கிழமை மாலை சுற்றி வளைத்தனர். கடந்த 2008-ம் ஆண்டு மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்குச் சதித் திட்டம் தீட்டிய ஜமாத்-உத்-தாவா தீவிரவாத அமைப்பின் தலைவர் தான் இந்த ஹபீஸ் சயீது. இந்த நிலையில் பஞ்சாப் மாகாண உள்துறை ஹபீஸ் சையத்தை வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து ஹபீஸ், லாகூரில் உள்ள வீட்டை விட்டு வெளியே வராதபடி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் அவனது கூட்டாளிகள் 4 பேரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

அமெரிக்க அரசின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டெனால்டு டிரம்ப் தீவிரவாத இயக்கங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு அறிவுறுத்தினார். மேலும் ஜமாத் அத் தாவா அமைப்பு மீதும், அதன் தலைவர் ஹபீஸ் சையத் மீதும் நடவடிக்கை எடுக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்து இருந்தார். இதனால் ஹபீஸ் சயீத் மற்றும் அவனது இயக்கத்தினருக்கு எதிரான நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு முடுக்கி விட்டுள்ளதாக கூறப்படுகிறது.    

இது குறித்து பாகிஸ்தான் தரப்பில் கூறியதாவது:-

ஹபீஸ் சயீத்துக்கு எதிராக கூறப்படும் குற்றசாட்டுகள் தீவிரமானது. எனவே இந்தியா வலுவான ஆதாரங்களை கொடுக்க வேண்டும் என நாங்கள் கோரிக்கை வைத்துள்ளோம் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டது.

Trending News