தெற்காசிய பொருளாதாரத்தில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது என WION உச்சி மாநாட்டில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஷேக் நஹயன் கூறியுள்ளார்.
பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பர்ஜ் கலீஃபா, துபாய் சட்ட மற்றும் ADNOC தலைமையகம் போன்றவை இந்திய தேசிய மூவர்ண தேசிய கொடியின் நிறத்தில் ஜொலித்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, துபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து கிரிக்கெட் அகாடமியை அந்நாட்டில் தொடங்க இருக்கிறார்.
தற்போதைய ஒருநாள் அணியின் விக்கெட் கீப்பராக உள்ள டோனி துபாயைச் சேர்ந்த பசிபிக் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் இணைந்து அந்நாட்டின் எம்.எஸ்.டோனி என்ற பெயரில் கிரிக்கெட் அகாடமி ஒன்றை தொடங்க இருக்கிறார்.
இந்த கிரிக்கெட் அகாடமியை ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு துபாயில் உள்ள இந்தியாவை சேர்ந்த தனியார் பேக்கரி நிறுவனம் ரூ.26 லட்சம் செலவில் உலகின் மிக விலையுயர்ந்த ‘தங்கல் கேக்’ உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கேக்கில் நடிகர் அமீர்கான் உருவம், படத்தில் அமீர்கானின் மகள்களாக நடித்த கீதா மற்றும் பாபிதா உருவம், தங்க பதக்கங்கள், இந்திய தேசியகொடி, புல், கொட்டகை, மணல் தளம் என தயாரிக்கப்பட்டுள்ளது.
துபாயில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை வந்த பயணிகள் விமானத்தின் சக்கரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அதிஷ்டவசமாக அனைத்து பயணிகள் உயிர் தப்பினர்.
இன்று அதிகாலை துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு வந்தடைந்த விமானம் தரை இறங்கும்போது, எந்திரக் கோளாறு ஏற்பட்டது. விமானி, சாமர்த்தியமாக விமானத்தை ஓடுபாதையில் நிறுத்தி, 164 பயணிகளின் உயிரைக் காப்பாற்றினார்.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரை துபாயில் நடத்த அனுமதி கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பிசிசிஐ கடிதம் எழுதியுள்ளது.
அரசு அனுமதி வழங்கும்பட்சத்தில் துபாயில், இரு அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் நடக்கும்.
இந்தியா மீது பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடக்கவில்லை. பிசிசிஐ தலைவராக இருந்த சஷாஙக் மனோகர் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான குறுகிய கால கிரிக்கெட் தொடர் நடத்த முயற்சி செய்யப்பட்டது. ஆனால், மத்திய அரசு இதற்கு அனுமதி தரவில்லை.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கான்பூரில் இந்தூர் - பாட்னா எக்ஸ்பிரஸ் ரெயில் கவிழ்ந்து 150 பேர் பலியானார்கள். இந்த விபத்தில் ரயிலின் 14 பெட்டிகள் கவிழ்ந்தன. இந்த விபத்துக்கு நாசவேலையே காரணம் என விசாரணையில் தெரிய வந்தது.
திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் சென்ற 777 போயிங் ரக எமிரேட்ஸ் விமானம் விபத்திற்குள்ளானது. இன்று பகல் 12.45 மணிக்கு துபாயில் விமானம் தரையிறங்கிய போது விமானத்தில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவியது. இதனால் பயணிகள் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டனர். இந்த தீ விபத்தில் எந்த உயிர் சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
திருவனந்தபுரத்தில் இருந்து துபாய் சென்ற 777 போயிங் ரக எமிரேட்ஸ் விமானம் விபத்திற்குள்ளானது. இன்று பகல் 12.45 மணிக்கு துபாயில் விமானம் தரையிறங்கிய போது விமானத்தில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென பரவியது. இதனால் பயணிகள் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டனர். இந்த தீ விபத்தில் எந்த உயிர் சேதமோ, யாருக்கும் காயமோ ஏற்படவில்லை என கூறப்படுகிறது.
துபாயில் இருந்து கோழிக்கோடு சென்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் ஐ.எஸ். ஆதரவு கோஷங்களை எழுப்பியதால் விமானமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து விமானம் மும்பைக்கு திருப்பி விடப்பட்டது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.