பாலிவுட்டில் மட்டுமல்லாமல், இந்திய அளவில் ஒரு மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தைத் தன் பின்னால் வைத்திருக்கும் ஒரு நடிகர், 'மிஸ்டர்.பெர்ஃபெக்ட்' என்று கூறப்படும் அமீர்கான்.
இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு துபாயில் உள்ள இந்தியாவை சேர்ந்த தனியார் பேக்கரி நிறுவனம் ரூ.26 லட்சம் செலவில் உலகின் மிக விலையுயர்ந்த ‘தங்கல் கேக்’ உருவாக்கப்பட்டு உள்ளது. இந்த கேக்கில் நடிகர் அமீர்கான் உருவம், படத்தில் அமீர்கானின் மகள்களாக நடித்த கீதா மற்றும் பாபிதா உருவம், தங்க பதக்கங்கள், இந்திய தேசியகொடி, புல், கொட்டகை, மணல் தளம் என தயாரிக்கப்பட்டுள்ளது.
அமீர்கான் ‘தங்கல்’ என்ற படத்தில் ஹரியானா குஸ்தி வீரனாக நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படத்தை நிதிஷ் திவாரி இயக்குகிறார். இப்படம் வரும் டிசமபர் 23-ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.
அரியானாவில் புகழ்பெற்ற குஸ்தி வீரர் மகாவீர் சிங் போஹட்டின் வாழ்க்கை வரலாற்றை பின்னணியாக கொண்டது இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு படத்திலும் புதுமை செய்யும் அமீர்கான், இப்படத்தில் என்ன புதுமை செய்திருப்பார் என ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.