துபையில் நட்சத்திர ஹோட்டலில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் நேற்று இரவு 10 மணியளவில் தனி விமானம் மூலம் மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. விமானத்தில் கணவர் போனி கபூர், அவரது மகன் அர்ஜுன் கபூர் ஆகியோரும் உடன் வந்தனர். மும்பை விமான நிலையத்தில் அனில் கபூர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உடலை பெற்றுக் கொண்டனர். இன்று அரவது இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளன.
இன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை பொது மக்கள் அஞ்சலிக்காக அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள செலிபெரஷன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் ஸ்ரீதேவியின் உடல் வைக்கப்படும். அதன் பின்னர் இன்று மாலை 3.30 மணிக்கு உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் வில்லேபர்லா மயானத்தில் ஸ்ரீதேவியின் குடும்பத்தாரின் முறைப்படி தகனம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக துபாய் சென்ற ஸ்ரீதேவி எதிர்பாராத விதமாக மரணமடைந்துள்ளார். முதலில் மாரடைப்புக் காரணமாக ஸ்ரீதேவி உயிரிழந்ததாகச் செய்திகள் வெளியானது. மயங்கிய நிலையில் நீர் நிரம்பிய குளியல் தொட்டியில் அவர் கிடந்தார் என கூறப்பட்டது.
மேலும், அவர், அளவுக்கு அதிகமாக மது குடித்திருந்ததாகவும், அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், ஸ்ரீதேவியின் மரணத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டது. அவரது உடலை, மும்பை எடுத்து வருவதிலும் தாமதம் ஏற்பட்டது.
ஸ்ரீதேவி மரணத்தில், பல சந்தேகங்கள் இருப்பதாக, துபாய் அரசு வழக்கறிஞர் கூறியதால், பரபரப்பு ஏற்பட்டது .இதையடுத்து, ஸ்ரீதேவியின் மரணம் குறித்து, பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.அவரது கணவர், போனி கபூரிடமும், உறவினர்களிடமும், துபாய் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், நேற்றும் விசாரணை தொடர்ந்தது. பின், ஸ்ரீதேவியின் மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை என்றும், வழக்கின் விசாரணை முடிக்கப்பட்டு விட்டதாகவும், அரசு வழக்கறிஞர் தெரிவித்ததை அடுத்து, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இதன்பின், ஸ்ரீதேவியின் உடலை அவரது கணவர் போனி கபூர் மற்றும் மகன் அர்ஜுன் கபூர் ஆகியோரிடம் துபை அரசு அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஒப்படைத்தனர். அதன் பின் ஸ்ரீதேவியின் உடல், 'எம்பாமிங்' எனப்படும் பதப்படுத்துதல் நடவடிக்கைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
'எம்பாமிங்' முடிந்ததும் துபை விமான நிலையத்துக்கு உடல் கொண்டு வரப்பட்டது. அங்கு, மும்பையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்த தனி விமானத்தில் ஸ்ரீதேவியின் உடல் ஏற்றப்பட்டு மும்பைக்கு இரவு 10 மணியளவில் வந்து சேர்ந்தது.
மும்பையில், ஸ்ரீதேவியின் வீடு அருகே உள்ள செலப்ரேஷன் ஸ்போர்ட்ஸ் கிளப் வளாகத்தில் இன்று காலை, 9:30 மணி முதல், பகல், 12:30 மணி வரை, அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது.
அதன்பின், மாலை, 3:30 மணிக்கு, விலே பார்லேயில் உள்ள மின் மயானத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்படுகிறது. ஸ்ரீதேவி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக, பிரபல நடிகர்களும், பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள ரசிகர்களும், மும்பையில் குவிந்து உள்ளனர்.
Kapoor family to stand united at #Sridevi's funeral
Read @ANI story | https://t.co/oToTAjIqbO pic.twitter.com/Kzp2Ltuq0K
— ANI Digital (@ani_digital) February 27, 2018
Unki wajah se mera bhai aaj zinda hai. Main kuch nahi kar sakta unke (Sridevi) liye, lekin main kam se kam unki antim yatra mein toh shaamil ho hi sakta hoon: Jatin Valmiki, a visually impaired man from Uttar Pradesh who has been waiting outside #Sridevi's house. pic.twitter.com/uXnU74B6Bn
— ANI (@ANI) February 28, 2018