ஸ்ரீதேவி-யின் இறுதிச்சடங்கில் நடிகர் ரஜினி பங்கேற்கின்றார்!

ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது!

Last Updated : Feb 25, 2018, 08:33 PM IST
ஸ்ரீதேவி-யின் இறுதிச்சடங்கில் நடிகர் ரஜினி பங்கேற்கின்றார்! title=

ஸ்ரீதேவியின் இறுதிச்சடங்கில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது!

தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல்வேறு மொழி திரைப்படங்களில் நடித்த பிரபல நடிகை ஸ்ரீதேவி (54) நேற்று இரவு 11 மணியளவில் மாரடைப்பு காரணமாக உயிர் இழந்தார்!

துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற ஸ்ரீதேவி, திடீரென உயிரிழந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். இந்நிலையில் இவரது உடல் துபாயில் இருந்து இன்று மும்பை கொண்டுவரப்படுகிறது.

நாளை மும்பையில் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செய்யப்படுகிறது. இந்நிகழ்வில் இந்திய பிரபலங்கள் பலரும் கலந்துக்கொள்ள உள்ள நிலையில் தமிழகத்தில் இருந்து நடிகர் ரஜினிகாந் அவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

முன்னதாக இந்திய திரைப்பிரபலங்கள் பலரும் ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இரங்கள் செய்திகளை பதிவுசெய்தனர். மேலும் அவரது பூத உடலின் வருகைக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.

அனில் அம்பானியின் தனி விமானம் ஸ்ரீதேவியின் பூதவுடலை துபாயில் இருந்து மும்பைக்கு கொண்டுவர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!

Trending News