துபாயில் இன்று WION உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. அதில் தெற்காசியாவின் பலம், வாய்ப்புகள் மற்றும் அதிகாரம் குறித்து ஆலோசனை குறித்து முக்கிய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பேசி வருகின்றனர் தெற்காசிய நாடுகளுக்கு இடையே பொருளாதார ஒத்துழைப்பு தேவை, பயங்கரவாதம், சமாதானம் மற்றும் முன்னேற்றம் பற்றிய தங்கள் கருத்துக்களை கூறிவருகின்றனர்.
இந்த மாநாட்டின் சிறப்பு விருந்தினராக ஐக்கிய அரபு எமிரேட்ஸின் ஷேக் நஹயன் முபாரக் அல் நஹாயன் கலந்துக்கொள்கிறார். அவருடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இந்திய தூதர் நவ்தீப் சூரி கலந்துக்கொள்கிறார்.
WION உச்சி மாநாட்டில் பேசிய சிறப்பு விருந்தினராக ஷேக் நஹயன் கூறியாதவது:- தெற்காசிய பொருளாதாரத்தில் இந்தியாவின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் உலக விவகாரங்களில் இந்தியாவின் புகழ் அதிகரிக்க இன்னும் சிறப்பான அணுகுமுறையை தேவை. இந்தியாவின் இந்த நிலைமை தெற்காசிய பிராந்தியத்திற்கான புதிய சாத்தியங்களை உருவாக்குகிறது.
அதே நேரத்தில், தெற்காசியா பிராந்தியத்தின் வர்த்தக மற்றும் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு சூழலை உருவாக்க, அனைத்து மட்டங்களிலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார். இந்தியா மற்றும் பிற ஆசிய நாடுகளுடன் UAE-யின் உறவு சுமூகமாக உள்ளது. உலகளாவிய பாதுகாப்பில் தெற்காசியா பிராந்தியம் முக்கிய பங்கு வகிக்கிறது.
தெற்காசியாவின் வலிமை, வாய்ப்புக்கள் மற்றும் எதிர்கால நிலை என்ற அடிப்படையில் இந்த உச்சி மாநாட்டுக்கு (Unleashing the Power of South Asia) ஏற்ப்பாடு செய்த WION மற்றும் ZEE Media க்கு நன்றிகளை கூறினார். இதன் மூலம் நீங்கள் சமாதான மற்றும் நிலையான அபிவிருத்திக்கு ஊக்கமளித்து வருவதாக அவர் தெரிவித்தார்.