கிர்கிஸ்தானில் உள்ள சீன தூதரகம் முன்பு குண்டு வெடிப்பு நடந்தது. இந்த சம்பவத்தில் பலர் காயமுற்ற நிலையில் ஆஸ்பத்தரிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுவரை கிடைத்த தகவல் படி ஒருவர் பலியாகியுள்ளதாக தெரிகிறது. 3 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.
பிஸ்கேக் பகுதியில் சீன தூதரகம் உள்ளது. தூதரகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த காரில் இருந்து குண்டு வெடித்ததாக கூறப்படுகின்றனர். பலியானவர்கள் எத்தனை பேர் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. சம்பவ இடத்தில் பாதுகாப்பு மற்றும் மீட்பு படையினர் விரைந்து உள்ளனர்.
பாகிஸ்தானுக்கு எதிராக பலுசிஸ்தானை சேர்ந்த மக்கள் நேற்று பல போராட்டம் நடத்தினர். இவர்கள் பாகிஸ்தான் அரசாங்கத்துக்கு எதிராகவும், இந்தியாவுக்கு ஆதரவாகவும் முழக்கங்கள் எழுப்பினர்.
இந்நிலையில் பாகிஸ்தான் மற்றும் சீனாவிற்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பா, ஜெர்மனி போன்ற நாடுகளில் பலுசிஸ்தானியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். பலுசிஸ்தானை விட்டு சீனா வெளியேற வேண்டும் எனவும், பாகிஸ்தானும் சீனாவும் பலுசிஸ்தான் மக்களை சுயநலத்திற்காக பயன்படுத்துவதாகவும், எங்களுக்கு சுதந்திரம் வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
வடகிழக்கு மாநிலங்களில் பிரமோஸ் ஏவுகணையை நிறுவ இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, இந்த நடவடிக்கை எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவும் நிலைத்தன்மையில் எதிர்மறை சூழ்நிலையை ஏற்படுத்தும் என கூறியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் பிரமோஸ் ஏவுகணையை நிறுவ இந்தியா முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது சீனா,
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி தலைமையில் நடந்த அமைச்சரவை குழு கூட்டத்தில், வடகிழக்கு மாநிலங்களில் பிரமோஸ் ஏவுகணையை நிறுவ ஒப்புதல் வழங்கப்பட்டது. சீனா உரிமை கொண்டாடும் அருணாச்ச பிரதேசத்தில் பிரமோஸ் ஏவுகணை நிறுவப்பட உள்ளது.
தென் சீனக் கடல் பகுதி தொடர்பாக பிலிப்பைன்ஸ் அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. அந்த வழக்கின் முடிவில் தென் சீனக் கடல் பகுதியில் சீனாவிற்கு உரிமை இல்லை என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்த நிலையில் தென் சீனக் கடல் பகுதி தங்களுக்குத்தான் சொந்தம் என்று சீனா, வியட்நாம், தைவான் பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன.
சீனாவின் ஹுபெய் மாகாணத்தில் 5 வயது சிறுமி ஒருவர் கண் அரிப்பாலும் கண் எரிச்சலாலும் அவதி பட்டு வந்து உள்ளார். அவரது தயார் பலமுறை நீரில் கண்களை கழுவியும் அந்த எரிச்சல் மற்றும் அரிப்பு நீங்கவில்லை இதனால் அவர் சிறுமியை கண் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். சிறுமியின் கண்ணை டாக்டர்கள் மைக்ரோஸ்கோபி கருவி மூலம் சோதனை செய்தனர் அப்போது சிறுமியின் கண் இமையில் பேன்கள் கூடு கட்டி இருந்தது தெரியவந்தது. உடனடியாக அதை டாக்டர்கள் நீக்கினர் அதில் 9 பேன்களும் 20 முட்டைகளும் இருந்து உள்ளது.
தென்சீன கடலில் உரிமை கோரும் விவகாரத்தில் சீனாவுக்கும், பிலிப்பைன்சிற்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் சீனாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மேலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாவிற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன.
சுற்றுலாப்பயணிகளை திகிலூட்டும் 4600 அடி உயரத்தில் கண்ணாடி நடைபாதை
சீனாவின் சுற்றுலாத்துறை சுற்றுலாப்பயணிகளுக்கு 4600 அடி உயரத்தில் நடைபாதை ஒன்றை கண்ணாடியில் வடிவமைத்துள்ளது. ஹூனான் மாகாணத்தில் அமைந்துள்ள தினமென் மலை மீது இந்த திகிலூட்டும் கண்ணாடி நடைபாதையை சீனா அரசு அமைத்துள்ளது.
இந்த மலையில் சுமார் 100 மீட்டர் தூரம் சுற்றுலாப்பயணிகள் கண்ணாடி நடைபாதை வழியாக நடந்து வரலாம். திங்கள்கிழமை(ஆகஸ்ட் 1) முதல் இந்த கண்ணாடி நடைபாதை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்துள்ளனர்.
சீனா தலைநகர் பிஜிங்கில் உள்ள சபாரி வனவிலங்கு பூங்காவிலே இக்கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. பூங்காவில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான குறித்த காட்சி தற்போது வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீன எல்லையருகேயுள்ள லடாக் பகுதியில் 100 ராணுவ டாங்குகளை இந்திய ராணுவம் நிறுத்தி வைத்துள்ளது.
இந்திய எல்லையில் சீனா அடிக்கடி அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. அருணாச்சல் பிரதேசத்தின் சில பகுதிகளையும் சீனா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதனால் இந்தியா- சீனா இடையே கடந்த 1962-ம் ஆண்டில் இந்தியா சீனா இடையே போர் மூண்டது. அப்போது, இங்கு ராணுவ டாங்குகள் மூலம் இந்தியா தாக்குதல் நடத்தியது. தாக்குதலுக்கு பின்னர் டாங்குகள் திரும்ப பெறப்பட்டன.
சீனாவின் தெற்கிலுள்ள ஹய்நான் தீவின் அருகிலுள்ள ஒரு பகுதி பல நாட்கள் மூடப்பட்டிருக்கும் என்று சீனாவின் கடல் சார் பாதுகாப்பு நிர்வாகம் கூறியுள்ளது.
தென் சீனக் கடலின் கிட்டத்தட்ட முழு கடற்பரப்பையும் சீனா தனக்கு சொந்தமானது என உரிமை கொண்டாடுவதை, த ஹேக்கிலுள்ள சர்வதேச நடுவர் தீர்ப்பாயம் மறுத்திருக்கும் சில நாட்களுக்கு பின்னர் சீனாவின் இந்த அறிவிப்பு வந்துள்ளது, ஆசியாவின் ஆறு நாடுகள் இந்த கடற்பரப்பிற்கு உரிமை கொண்டாடி வருகின்றன.
தெற்கு சீன கடல்பகுதியில் உள்ள வளங்களுக்கு சீனா வரலாற்று உரிமை கோர முடியாது என்று ஹேக் தீர்ப்பாயம் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ளது.
ஆனால் பிலிப்பைன்ஸ் தொடர்ந்த இந்த வழக்கில், தங்களை எந்த உத்தரவும், தீர்ப்பும் பாதிக்காது, ஒன்றும் செய்ய முடியாது என்று தீர்ப்பாயத்தின் உத்தரவை, தீர்ப்பை சீனா புறக்கணித்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.