India And China : தென் சீனக் கடலின் பெரும்பகுதியை உரிமை கொண்டாடும் சீனாவுக்கும், பிலிப்பைன்ஸ், வியட்நாம், மலேசியா, புருனே மற்றும் தைவான் ஆகிய நாடுகளுக்கும் கருத்து வேறுபாடு நிலவுகிறது...
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்து வரும் மோதல்களுக்கு இடையே, இரு நாடுகளும் போர் விமானங்கள் நேருக்கு நேர் மோதலில் இருந்து நொடி நேரத்தில் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹாங்காங்கின் புகழ் பெற்ற பிரம்மாண்ட மிதக்கும் உணவகம், ஜம்போ கடலில் மூழ்கி விட்டது. உலக பிரபலங்கள் பலரின் மனம் கவர்ந்த இந்த பிரம்மாண்ட ஹோட்டல் ஹாங்காங்கின் அடையாளமாக திகழ்ந்தது என்றால் மிகையில்லை.
சீனாவின் அத்துமீறல்களை ஒடுக்க உலகின் ஜனநாயக நாடுகள் கூட்டாக முன்வர வேண்டும் என தைவான் விரும்புகிறது.
தைவானில் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் மூத்த மேற்கத்திய இராஜதந்திரிகள் கலந்து கொண்ட ஒரு மன்றத்தில் பேசிய தைவான் அதிபர் சாய், "சர்வாதிகார ஆக்கிரமிப்பிலிருந்து" ஜனநாயகத்தை பாதுகாப்பதில் தைவான் முன்னணியில் உள்ளது என்றார்.
சர்ச்சைக்குரிய தென்கிழக்கு கடற்கரையில் தீவில் சீனாவின் 'தென்கிழக்கு சினிமாவினை சீனா திறந்து வைத்துள்ளது. இந்நிகழ்வினை சீனா, பொதுமக்களின் உள்கட்டமைப்பை உருவாக்கவும், பெய்ஜிங் இறையாண்மையை வலியுறுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாவும் கருதுகிறது. வியட்நாம் மற்றும் தைவான் நாடுகளின் உள்தீவுகளில் இந்த சினிமா ஏற்கனவே உள்ளது. தற்போது தென் கடற்கரையின் நிர்வாக மையமாக விளங்கும் சன்ஷா நகரத்தின் பாராசல்களின் தீவில் முன்னதாக திறக்கப்பட உள்ளது.
தென் சீனக் கடல் பகுதியை உரிமை கோருவதைச் சீனா தொடருமானால், அதை எதிர்கொள்ளத் அமெரிக்கா தயாராக உள்ளது என கடற்படையின் தளபதி அட்மிரல் கூறியுள்ளார்.
அமெரிக்கக் கடற்படையின் பசிபிக் பகுதி தளபதி அட்மிரல் ஹரி ஹாரிஸ் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்கு சென்றார். அப்போது அவர் பேசியதாவது:-
பொதுப் பயன்பாட்டுக்கு உரிய ஒரு பகுதி ஒருதலைப்பட்சமாக மூடப்படுவதை அனுமதிக்கமுடியாது. அங்கு எத்தனை ராணுவத் தளங்கள் அமைக்கப்பட்டிருந்தாலும் அதில் மாற்றமில்லை. தென் சீனக் கடல் பகுதியை உரிமை கோருவதைச் சீனா தொடருமானால், அதை எதிர்கொள்ளத் அமெரிக்கா தயாராக உள்ளது என அவர் கூறினார்.
தென் சீனக் கடல் பகுதி தொடர்பாக பிலிப்பைன்ஸ் அரசு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தது. அந்த வழக்கின் முடிவில் தென் சீனக் கடல் பகுதியில் சீனாவிற்கு உரிமை இல்லை என்று சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இந்த நிலையில் தென் சீனக் கடல் பகுதி தங்களுக்குத்தான் சொந்தம் என்று சீனா, வியட்நாம், தைவான் பிலிப்பைன்ஸ், மலேசியா, புருனே ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன.
தென்சீன கடலில் உரிமை கோரும் விவகாரத்தில் சீனாவுக்கும், பிலிப்பைன்சிற்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. இது தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் சீனாவின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மேலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் சீனாவிற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றன.
சீனாவின் தெற்கிலுள்ள ஹய்நான் தீவின் அருகிலுள்ள ஒரு பகுதி பல நாட்கள் மூடப்பட்டிருக்கும் என்று சீனாவின் கடல் சார் பாதுகாப்பு நிர்வாகம் கூறியுள்ளது.
தென் சீனக் கடலின் கிட்டத்தட்ட முழு கடற்பரப்பையும் சீனா தனக்கு சொந்தமானது என உரிமை கொண்டாடுவதை, த ஹேக்கிலுள்ள சர்வதேச நடுவர் தீர்ப்பாயம் மறுத்திருக்கும் சில நாட்களுக்கு பின்னர் சீனாவின் இந்த அறிவிப்பு வந்துள்ளது, ஆசியாவின் ஆறு நாடுகள் இந்த கடற்பரப்பிற்கு உரிமை கொண்டாடி வருகின்றன.
மூன்று நாள் சுற்றுப்பயணமாக தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா வியாழக்கிழமை அன்று இந்தியா வந்து சேர்ந்தார்.
கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ளுதல், வர்த்தகத்தை மேம்படுத்துதல் ஆகிய விவகாரங்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். தெற்கு சீன கடல் பகுதியில் நிலவும் சூழல் குறித்து இரண்டு தலைவர்களும் விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.