சீனாவின் தெற்கிலுள்ள ஹய்நான் தீவின் அருகிலுள்ள ஒரு பகுதி பல நாட்கள் மூடப்பட்டிருக்கும் என்று சீனாவின் கடல் சார் பாதுகாப்பு நிர்வாகம் கூறியுள்ளது.
தென் சீனக் கடலின் கிட்டத்தட்ட முழு கடற்பரப்பையும் சீனா தனக்கு சொந்தமானது என உரிமை கொண்டாடுவதை, த ஹேக்கிலுள்ள சர்வதேச நடுவர் தீர்ப்பாயம் மறுத்திருக்கும் சில நாட்களுக்கு பின்னர் சீனாவின் இந்த அறிவிப்பு வந்துள்ளது, ஆசியாவின் ஆறு நாடுகள் இந்த கடற்பரப்பிற்கு உரிமை கொண்டாடி வருகின்றன.
உலகில் மிகவும் விறுவிறுப்பாக இயங்கும் கப்பல் போக்குவரத்து பாதைகள் சிலவற்றின் தாயகமாக தென் சீனக் கடல் இருப்பதோடு, விலைமதிப்பு மிக்க மீன் வளத்தையும், எண்ணெய் படிவுகளையும் கொண்டுள்ளது.