தற்கால இளைஞர்கள் விளையாட்டு தனமாக இருக்கின்றான் என பலரை நாம் குறிப்பிடுவது உண்டு. வாழ்க்கையினை குறித்த கவலைகள் இல்லாமல் விளையாட்டு தனமாக இவர்கள் இருக்கின்றனர் என்பது குறிக்கும் வகையிலேயே இவ்வாறு நாம் குறிப்பிடுவதுண்டு.
ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டிக்கு, தான் தயாராக இருப்பதாக குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் அறிவித்துள்ளார்
ANI அறிக்கையின் படி மேரி கோம் "ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டைப் போட்டிக்கான தீவிர பயிற்சி பெற்று வருகின்றேன். போட்டியில் பங்கேற்க போதுமான வலிமையுடன் இருப்பது போல் உணர்கின்றேன்" என அவர் தெரிவித்துள்ளார்.
I am strong and ready to fight at the Asian Boxing Championship: Olympic medalist MC Mary Kom pic.twitter.com/GsUH4mcdhZ
சமீபத்தில் குஜராத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கபடி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் அனுப் குமார் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கோப்பை வென்ற இந்திய வீரர்களுக்கு டெல்லியில் உள்ள மத்திய விளையாட்டுத்துறை மந்திரி விஜய் கோயல் தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் ஒலிம்பிக்கில் கபடி விளையாட்டை சேர்ப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.
ஒலிம்பிக் மகளிர் மல்யுத்தத்தின் 58 கிலோ எடை பிரீ ஸ்டைல் பிரிவில் இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் வெண்கலப் பதக்கம் வென்றார். இதன்மூலம் மல்யுத்தப் பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற புதிய சாதனை படைத்தார். நாடு திரும்பிய சாக்ஷி, இன்று அதிகாலை டில்லி விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர்கள், பொதுமக்கள் அவரை வரவேற்றனர். சாக்ஷி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்த அனைவருக்கும் நன்றி எனத் தெரிவித்தார்.
ரியோவில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்காக நடந்த மாரத்தான் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட வீராங்கனை ஒ.பி. ஜெய்ஷாவிற்கு மாரத்தான் போட்டியின் போது தண்ணீர் வழங்கப்படவில்லை என புகார் எழுந்துள்ளது.
ஒலிம்பிக்கில் சாதனை படைத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு நாட்டின் உயரிய விருதான ராஜிவ் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜிம்னாஸ்டிக் தீபாகர்மாகர், பேட்மிண்டன் சிந்து, மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், துப்பாக்கிச்சுடுதல் வீரர் ஜித்துராய் ஆகிய நான்கு பேரும் இந்த விருதை பெறுகின்றனர்.
ஒலிம்பிக் பாட்மின்டனில் வெள்ளிப்பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார் சிந்து.
பிரேசிலில் ரியோ ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதன் பாட்மின்டன் பெண்கள் ஒற்றையர் பைனலில் தரவரிசையில் 10-வது இடத்திலுள்ள இந்திய வீராங்கனை சிந்து, 'நம்பர்-1' வீராங்கனை, ஸ்பெயினின் கரோலினா மரினை எதிர்கொண்டார்.
ஒலிம்பிக்கில் பேட்மிட்டன் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்று பதக்க வாய்ப்பை உறுதி செய்திருக்கிறார் 21 வயதாகும் பத்ம ஸ்ரீ பி.வி.சிந்து. பிரேசிலில் உள்ள ரியோ டி ஜெனிரோ நகரத்தில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் ஜப்பானின் நொஜொமி ஒக்குஹராவை நேர் செட்டுகளில் வீழ்த்தி இறுதிசுற்றில் நுழைந்தார் பி.வி சிந்து. இந்தியர் ஒருவர் ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறுவது இதுவே முதன் முறை ஆகும்.
ரியோவில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில் மகளிருக்கான மல்யுத்த கால் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனை வீனேஷ் போகத் மற்றும் சீன வீரங்கனை சுன் யானன் ஆகியோர் மோதினர்.
ரியோ ஒலிம்பிக் மகளிர் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து காலிறுதிக்கு மற்றும் பேட்மிண்டன் ஆடவர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் கிதாம்பி ஸ்ரீகாந்த் முன்னேறி உள்ளார்.
பி.வி.சிந்து
ஊக்க மருந்து சர்ச்சையில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்ககேற்கயிருந்த இந்திய தடகள வீரர் ஒருவர் சிக்கியிருக்கிறார்.
குண்டு எறிதலில் ஆசிய அளவில் கோப்பைகள் பெற்றவர் இந்திரஜித். இவர் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தரப்பில் செல்ல இருக்கும் வீரர்களில் ஒருவர் ஆவார். இவருக்கு நடத்தப்பட்ட ஊக்க மருந்து சோதனையில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் இவர் போட்டியில் பங்கேற்க முடியாமல் போயுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மல் யுத்த வீரர் நரசிங் மீதும் ஊக்க மருந்து புகார் கிளம்பியுள்ளது. அதேபோல் இந்திரஜித்தும் சிக்கியுள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.