2020 ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிக்கான அதிகாரப்பூர்வ சின்னம் வெளியிடப்பட்டுள்ளது!!
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஒலிம்பிக் திருவிழா, கடந்த 2016 ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்றது. தற்போது, 2020 ஆம் ஆண்டு ஒலிம்பிக் தொடர் ஜப்பானின் டோக்கியோ நகரில் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நடக்க இருக்கின்றது.
இந்த தொடருக்காக பல்வேறு அமைப்புகளில் சின்னம் தயார் செய்யப்பட்டு அதில் ஒன்றை தேர்வு செய்யும் முடிவு ஜப்பான் முழுவதும் உள்ள ஆரம்ப பள்ளி மாணவர்களை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன்படி முடிவில், டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் அதிகாரப்பூர்வ சின்னத்தை ஜப்பானின் கவர்னர் யூரிகோ, ஒலிம்பிக் அதிகாரப்பூர்வ ஏற்பாட்டுக்குழு தலைவர் Yoshiro Mori ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.
It's official! The name of the Tokyo 2020 Olympic Games mascot is #MIRAITOWA, and #SOMEITY as the Tokyo 2020 Paralympic Games mascot! Comment down below and Say Hi to our official mascots! pic.twitter.com/5AAYnsabKH
— #Tokyo2020 (@Tokyo2020) July 22, 2018
அதில் நீலம், சிகப்பு என இரண்டு நிறம், இரண்டு அமைப்புகளில் சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் Miraitowa என பெயரிடப்பட்டுள்ள நீல நிற சின்னம் ஒலிம்பிக் தொடருக்கும், Someity என பெயரிடப்பட்டுள்ள சிகப்பு நிற சின்னம் பாராலிம்பிக் தொடருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.