ஒலிம்பிக்கில் சாதனை படைத்த வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு நாட்டின் உயரிய விருதான ராஜிவ் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஜிம்னாஸ்டிக் தீபாகர்மாகர், பேட்மிண்டன் சிந்து, மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக், துப்பாக்கிச்சுடுதல் வீரர் ஜித்துராய் ஆகிய நான்கு பேரும் இந்த விருதை பெறுகின்றனர்.
இது போல் குத்துசண்டை, நீச்சல் உள்ளிட்ட பல்வேறு சிறந்த பயிற்சியாளர்களுக்கு துரணோச்சாரியார் விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. தடகள பயிற்சியாளர் நாகபுரி ரமேஷ், குத்துச்சண்டை பயிற்சியாளர் சாகர் மால், கிரிக்கெட் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா, நீச்சல் போட்டி பயிற்சியாளர் பிரதீப்குமார், ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் பிஸ்வேஸ்வர் நந்தி, மல்யுத்த பயிற்சியாளர் மஹாவீர்சிங் ஆகியோர் துரோணாச்சாரியார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ராஜத்சவுகான், ரஹானே, லலிதா பாபர், சிவா, தாபா, வீரேந்தர்சிங், வினேஷ், அபூர்வி சாண்ட்லே உள்ளிட்ட 15 வீரர்களுக்கு அர்ஜூனா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் ஆகஸ்ட் 29-ம் தேதி ஜனாதிபதி மாளிகையில் நடக்கும் விழாவில் அவர்களுக்கு விருது வழங்கப்படும்.
#FLASH: Rajiv Gandhi Khel Ratna award to be conferred on #PVSindhu , #DipaKarmakar , Jitu Rai and Sakshi Malik
— ANI (@ANI_news) August 22, 2016
#FLASH Arjuna Awards 2016 being awarded to 15 sportspersons, Ajinkya Rahane, Lalita Babar, Shiva Thapa & Apurvi Chandela amongst awardees.
— ANI (@ANI_news) August 22, 2016