இந்திய கபடி வீரர்களுக்கு தலா ரூ.10 லட்சம் விஜய் கோயல் அறிவிப்பு

சமீபத்தில் குஜராத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கபடி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் அனுப் குமார் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கோப்பை வென்ற இந்திய வீரர்களுக்கு டெல்லியில் உள்ள மத்திய விளையாட்டுத்துறை மந்திரி விஜய் கோயல் தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் ஒலிம்பிக்கில் கபடி விளையாட்டை சேர்ப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

Last Updated : Nov 4, 2016, 09:04 AM IST
இந்திய கபடி வீரர்களுக்கு தலா ரூ.10 லட்சம் விஜய் கோயல் அறிவிப்பு title=

புதுடெல்லி: சமீபத்தில் குஜராத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை கபடி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இப்போட்டியில் அனுப் குமார் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. கோப்பை வென்ற இந்திய வீரர்களுக்கு டெல்லியில் உள்ள மத்திய விளையாட்டுத்துறை மந்திரி விஜய் கோயல் தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் ஒலிம்பிக்கில் கபடி விளையாட்டை சேர்ப்பதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

இந்தியா இதுவரை 8 முறை உலக கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியில் நடைபெற்ற பாராட்டு விழாவில் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் பேசுகையில், எனது ஓய்வுக்குப் பின் தமிழகம் முழுவதும் வீரர்களை தேர்வு செய்து பயிற்சி அளிப்பேன். தமிழகத்தில் இருந்து நிறைய கபடி வீரர்கள் உருவாக வேண்டும் என தெரிவித்தார்.

Trending News