209 ரன் இலக்கை 17.3 ஓவர்களில் ‘சேசிங்’ செய்து குஜராத்தை வெளியேற்றியது டெல்லி அணி.
ஐபிஎல் கிரிக்கெட்டில் டெல்லி அணி 209 ரன் இலக்கை சேசிங் செய்து குஜராத் அணியை வெளியேற்றியது.
10-வது ஐபிஎல் போட்டி தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. நேற்றிரவு நடந்த 42-வது லீக் ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டி டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்றது.
ஐபிஎல் போட்டி தற்போது மிகவும் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தொடர்ச்சியாக 5 ஆட்டங்களில் தோல்வி கண்ட டெல்லி டேர்டெவில்ஸ் அணி கடைசி ஆட்டத்தில் ஐதராபாத்தை வென்றதன் மூலம் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெரும் வாய்ப்பு உள்ளது. அதாவது எஞ்சிய 5 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அது முடியும். ஒன்றில் தோற்றாலும் நடையை கட்ட வேண்டியது தான்.
எனவே இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ராகுல் திரிபாதி(93 ரன்கள்) அதிரடியால் புனே அணி ஏழாவது வெற்றியை பெற்றுள்ளது.
கொல்கத்தா ஈடன்கார்டனில் நேற்றிரவு நடந்த 41-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- புனே சூப்பர் ஜெயன்ட் அணிகள் மோதின.
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணிகள் மோதுகின்றன.
கவுதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா அணி இந்த சீசனில் 10 ஆட்டத்தில், 7 வெற்றி, 3 தோல்விகளுடன் 14 புள்ளிகள் பெற்று பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது.
புனே அணி 10 ஆட்டத்தில், 6 வெற்றி, 4 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. கடைசி இரு ஆட்டங்களிலும் வெற்றியை பதிவு செய்துள்ள அந்த அணி சரியான கட்டத்தில் பார்முக்கு திரும்பி உள்ளது.
10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் போட்டியில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களம் இறங்கிய ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணி திரிபாதி (37), ஸ்மித் (45), திவாரி (44 அவுட்இல்லை) ஆகியோரின் ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது.
10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 157 ரன்கள் வெற்றி இலக்காக புனே அணி நிர்ணயித்துள்ளது.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 9 ஆட்டங்களில் 6-ல் தோற்றுள்ள அந்த அணி இதுவரை 5 புள்ளி மட்டுமே பெற்றுள்ளது. ஒரு ஆட்டத்தில் 213 ரன்கள் (குஜராத்துக்கு எதிராக) குவித்து பிரமாதப்படுத்திய பெங்களூரு அணி இன்னொரு ஆட்டத்தில் 49 ரன்களில் (கொல்கத்தாவுக்கு எதிராக) சுருண்டு அதல பாதாளத்துக்கும் சென்று விட்டதை பார்க்க முடிந்தது.
ஐபிஎல் போட்டியின் 33-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. அந்த அணியில் தவாண்(77), வில்லியம்சன்(54), வார்னர்(51) ஆகியோர் அரைசதம் விளாசினர்.
ஐபிஎல் தொடர் போட்டியில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மோதுகின்றன.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இதுவரை 3 வெற்றி, 4 தோல்விகளை சந்தித்துள்ளது. தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் அடி வாங்கி பஞ்சாப் அணிக்கு குஜராத்துக்கு எதிரான வெற்றி மிகுந்த நம்பிக்கையை தந்துள்ளது. சொந்த ஊரில் விளையாடுவதால் ரசிகர்களின் ஆதரவு அமோகமாக இருக்கும்.
10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் டி20 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 3 ரன் வித்தியாசத்தில் ரைசிங் புனே சூப்பர்ஜயன்ட் அணியிடம் மீண்டும் தோல்வியை சந்தித்தது.
வாங்கடே மைதானத்தில் நேற்று இரவு நடந்த இந்த போட்டியில் டாசில் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசியது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கவுள்ள லீக் ஆட்டத்தில் ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட் அணியும், மும்பை அணியும் மோதுகிறது. இந்த போட்டி மும்பையில் நடக்கிறது
ஐபிஎல் தொடரில் ஒரே போட்டியில்தான் தோற்றுள்ள மும்பை அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. அந்த ஒரு தோல்வியை புனே அணிக்கு எதிராக மும்பை அணி சந்தித்தது. எனவே அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் மும்பை வீரர்கள் இப்போட்டியில் ஆடுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
குஜராத் லயன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ராஜ்கோட்டில் நேற்று நடந்த லீக் போட்டியில் குஜராத் லயன்ஸ் அணியுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோதியது. குஜராத் அணியில் ஜேம்ஸ் பாக்னர், பிரவீன் குமார், இஷான் கிஷன், தவல் குல்கர்னி ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதில் ஆண்ட்ரூ டை, ஆகாஷ்தீப் நாத், நாது சிங், சுபம் அகர்வால் ஆகியோர் சேர்க்கப்பட்டிருந்தனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 25-ஆவது லீக் ஆட்டத்தில் ரைஸிங் புனே சூப்பர் ஜயன்ட்ஸ் - சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இன்று மாலை 4 மணிக்கு புனேவில் நடைபெறுகிறது.
ஹைதராபாத் அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றிகளையும், புனே 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றிகளையும் பெற்றுள்ளன.
ஹைதராபாத் அணியில் கேப்டன் வார்னர், ஷிகர் தவன், வில்லியம்சன், யுவராஜ் சிங், ஹென்ரிக்ஸ் போன்ற வலுவான பேட்ஸ்மேன்களும், புவனேஸ்வர் குமார், ரஷித் கான் போன்ற பந்துவீச்சாளர்களும் பலம் சேர்க்கின்றனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 24-ஆவது லீக், இன்று இரவு 8 மணிக்கு மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டேவில்ஸ் அணிகள் மோதுகிறது.
மும்பை அணி 6 ஆட்டத்தில் 5 வெற்றிகளை குவித்து பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. கடைசியாக டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 198 ரன்கள் இலக்கை 15.3 ஓவர்களில் விரட்டிப் பிடித்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 23-ஆவது லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் லயன்ஸ் வெற்றி பெற்றது.
கொல்கத்தாவில் நேற்று(வெள்ளிக்கிழமை) நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் சுரேஷ் ரெய்னா பீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து பேட் செய்த கொல்கத்தா அணி ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கியது. 4-ஆவது ஓவரை கேப்டன் ரெய்னா வீசினார். அவருடைய பந்தை அடித்து ஆட முற்பட்ட நரேன் 17 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சேர்த்த போது, பாக்னரிடம் கேட்ச் ஆனார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 23-ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மற்றும் குஜராத் லயன்ஸும் மோதுகின்றன. இந்த போட்டி கொல்கத்தாவில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள கொல்கத்தா அணி 4 வெற்றிகளைப் பெற்றுள்ளது. அதில், கடைசியாக விளையாடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது கொல்கத்தா.
ஆனால் குஜராத் அணியோ இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் அந்த அணி, வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது.
10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் போட்டி நேற்று ஐதராபாத் ராஜுவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி பெற்றது.
முன்னதாக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை எடுத்தது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஹைதராபாத்தில் இன்று 8 மணிக்கு நடக்கும் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் மோதுகிறது.
இந்த ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, முதல் 2 போட்டிகளில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளை வென்றது. ஆனால் அதன் பிறகு மும்பை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் தோல்விகளை சந்தித்தது. தங்கள் சொந்த மண்ணில் நடக்கும் இப்போட்டியில் வென்று மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பும் ஆர்வத்தில் அந்த அணி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.