10வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் போட்டி நேற்று ஐதராபாத் ராஜுவ் காந்தி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி பெற்றது.
முன்னதாக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்களை எடுத்தது.
160 ரன்கள் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக அம்லா, மனன் வோஹ்ரா களமிங்கினர். இதில் புவனேஸ்வர் குமார் வீசிய முதல் பந்தில் அம்லா எல்.பி.டபிள்யூ ஆனார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் மேக்ஸ்வெல் 10 (12) ரன்களும், மோர்கன் 13 (17) ரன்களும், டேவிட் மில்லர் 1 (6) ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க பஞ்சாப் அணி தடுமாறியது. பின்னர் வந்த அனைவருமே சொற்ப ரன்களில் வெளியேற, தொடக்க வீரராக களமிங்கிய மனன் வோஹ்ரா மட்டும் அணியின் வெற்றிக்காக போராடிய நிலையில், 18.3 வது ஓவரில் புவனேஷ்வர் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். அவர் 50 பந்துகளில் 9 பவுண்டரி, 5 சிக்சர்கள் என 95 ரன்களை வினாசினார். ஐதராபாத் அணியில் புவனேஸ்வர் குமார் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இறுதியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 154 ரன்களை எடுத்தது. இதையடுத்து சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.