10-வது ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் மொத்தம் 8 அணிகள் விளையாடுகின்றன.
ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 157 ரன்கள் வெற்றி இலக்காக புனே அணி நிர்ணயித்துள்ளது.
பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 9 ஆட்டங்களில் 6-ல் தோற்றுள்ள அந்த அணி இதுவரை 5 புள்ளி மட்டுமே பெற்றுள்ளது. ஒரு ஆட்டத்தில் 213 ரன்கள் (குஜராத்துக்கு எதிராக) குவித்து பிரமாதப்படுத்திய பெங்களூரு அணி இன்னொரு ஆட்டத்தில் 49 ரன்களில் (கொல்கத்தாவுக்கு எதிராக) சுருண்டு அதல பாதாளத்துக்கும் சென்று விட்டதை பார்க்க முடிந்தது.
புனே சூப்பர் ஜெயன்ட் அணி 8 ஆட்டங்களில் விளையாடி 4-ல் வெற்றி கண்டு ஓரளவு நல்ல நிலையில் இருக்கிறது. ஒரு நாளில் மெச்சும்படி ஆடுகிறார்கள். இன்னொரு நாளில் சாதாரணமாக விளையாடுகிறார்கள். இது தான் புனே அணிக்கு உள்ள பிரச்சினை. இந்த குறையை களைய வேண்டியது அவசியமாகும். ஏற்கனவே பெங்களூருவை 27 ரன்கள் வித்தியாசத்தில் பதம் பார்த்த புனே சூப்பர் ஜெயன்ட் அணி சொந்த ஊரிலும் ஆதிக்கம் செலுத்த முனைப்பு காட்டும்.
இந்நிலையில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய புனே அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 157 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களமிறங்க உள்ளது