ஐபிஎல் 2017: 24-வது லீக், இரவு 8 மணிக்கு மும்பை மற்றும் டெல்லி மோதல்

Last Updated : Apr 22, 2017, 11:11 AM IST
ஐபிஎல் 2017: 24-வது லீக், இரவு 8 மணிக்கு மும்பை மற்றும் டெல்லி மோதல் title=

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 24-ஆவது லீக், இன்று இரவு 8 மணிக்கு மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி டேர்டேவில்ஸ் அணிகள் மோதுகிறது.

மும்பை அணி 6 ஆட்டத்தில் 5 வெற்றிகளை குவித்து பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. கடைசியாக டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் 198 ரன்கள் இலக்கை 15.3 ஓவர்களில் விரட்டிப் பிடித்து 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது.

டெல்லி அணி 5 ஆட்டத்தில் இரு வெற்றி, 3 தோல்விகளை பெற்றுள்ளது. இளம் வீரர்களான சஞ்சு சாம்சன், ரிஷப் பந்த், ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் சிறந்த பங்களிப்பை வழங்கி வருகின்றனர். டாப் ஆர்டரில் களமிறங்கும் சேம் பில்லிங்ஸ், கருண் நாயர் ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்கு சீரான வகையில் ரன்கள் குவிக்காதது சற்று பின்னடைவாக உள்ளது.

பந்து வீச்சில் ஜார்கீர் கான், மோரிஸ், பாட் கம்மின்ஸ், அமித் மிஸ்ரா ஆகியோர் பலம் சேர்ப்பவர் களாக உள்ளனர். போட்டி நடை பெறும் வான்கடே மைதானம் சுழலுக்கு சற்று சாகதமாக இருக்கும் என்பதால் அமித் மிஸ்ரா நெருக்கடிதரக்கூடும்.

இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Trending News