ஐபிஎல் 2017: 25-வது லீக், மாலை 4 மணிக்கு ஹைதராபாத், புனே மோதல்

Last Updated : Apr 22, 2017, 11:25 AM IST
ஐபிஎல் 2017: 25-வது லீக், மாலை 4 மணிக்கு ஹைதராபாத், புனே மோதல் title=

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 25-ஆவது லீக் ஆட்டத்தில் ரைஸிங் புனே சூப்பர் ஜயன்ட்ஸ் - சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இன்று மாலை 4 மணிக்கு புனேவில் நடைபெறுகிறது. 

ஹைதராபாத் அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றிகளையும், புனே 5 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றிகளையும் பெற்றுள்ளன.

ஹைதராபாத் அணியில் கேப்டன் வார்னர், ஷிகர் தவன், வில்லியம்சன், யுவராஜ் சிங், ஹென்ரிக்ஸ் போன்ற வலுவான பேட்ஸ்மேன்களும், புவனேஸ்வர் குமார், ரஷித் கான் போன்ற பந்துவீச்சாளர்களும் பலம் சேர்க்கின்றனர்.

புனே அணியில் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், அஜிங்க்ய ரஹானே, பென் ஸ்டோக்ஸ், மனோஜ் திவாரி, தோனி போன்ற பலம் வாய்ந்த பேட்ஸ்மேன்கள் இருந்தபோதிலும், அவர்கள் யாரும் தொடர்ச்சியாக ரன் குவிக்காதது பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. அந்த அணியின் பந்துவீச்சும் சிறப்பாக இல்லை. 

தோனியின் ஃபார்ம், புனேயின் உத்வேகம் ஆகியவற்றை பொறுத்து இன்றைய ஆட்டம் புனேவுக்கு கை கொடுக்குமா என்பது தெரியும்.

இவ்விரு அணிகளும் இதுவரை 2 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், ஹைதராபாத் ஒரு வெற்றியும், புனே ஒரு வெற்றியும் பெற்றுள்ளன.

இந்த போட்டி இன்று இரவு 8 மணிக்கு சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Trending News