நீலகிரி மாவட்டத்தில் ஜெர்மன் இன நாய்கள் கண்காட்சி!

நீலகிரி மாவட்டம், குன்னூரில் கோடை காலத்தையொட்டி நாய்கள் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை சிறப்பான முறையில் நடைபெற்றது.

Last Updated : Apr 23, 2018, 09:14 AM IST
நீலகிரி மாவட்டத்தில் ஜெர்மன் இன நாய்கள் கண்காட்சி! title=

நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் கோடை காலங்களில் நாய்கள் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். 

இந்நிலையில், இந்த ஆண்டிற்கான நாய்கள் கண்காட்சி கென்னல் கிளப் சார்பில் நீலகிரி மாவட்டம், குன்னூர் பிராவிடன்ஸ் கல்லுரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த கண்காட்சியில்,டாகோ ஆர்ஜென்டீனா, டாகோடிகா சயின்பெரான்டா, பாஸ்மிஅவ் கிரேட்டேன், ஜிஞ்சர் பிரென்ச்மேஸ்டிப், லாசாஅப்சோ, டேஷ்னட், கோல்டன் ரிட்ரிவர் உள்பட பல்வேறு இன நாய்கள் இடம் பெற்றன. 

இதில் ராணுவம், ரயில்வே, காவல் துறைகளில் குற்றங்களைக் கண்டறியப் பயன்படுத்தப்படும் ஜெர்மன் ஷெப்பர்டு இன நாய்கள் கலந்து கொண்டன.

இவை கட்டளைகளுக்குக் கீழ்படிதல், மோப்பத் திறன் உள்பட பல்வேறு சாகசங்களை செய்து காண்பித்தன. 

இதில் நடுவர்களாக மும்பையைச் சேர்ந்த அஞ்சலி, ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜெர்மன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டன.

அவர்கள், ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த நாய்களை தேர்ந்தெடுத்து அதன் உரிமையாளர்களுக்குப் உரிய பரிசுகள் வழங்கின.

இந்த கண்காட்சியியில் உள்ளூர் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Trending News