புதுடெல்லி: Vodafone-Idea, Airtel மற்றும் Jio போன்ற பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பல சிறிய ப்ரீபெய்ட் திட்டங்களை அவ்வப்போது கொண்டு வருகிறது. மூன்று நிறுவனங்களும் சிறந்த திட்டங்களைக் கொண்டு வருகிறது. வோடபோன்-ஐடியாவின் சிறிய ப்ரீபெய்ட் திட்டங்களைப் பற்றி இன்று நாம் இங்கே காண உள்ளோம்.
Vodafone-Idea (Vi) ரூ.99, ரூ.109, ரூ.129 மற்றும் ரூ.149 திட்டங்களை தற்போது அறிமுகம் செய்து உள்ளது. இந்த திட்டங்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்வோம்...
ALSO READ | இந்தியா விரைவில் 6G அறிமுகம்! 6ஜி நெட்வர்க்கின் அம்சங்கள் இது தான்!!
Vodafone-Idea வழங்கும் ரூ.99 திட்டம்
Vodafone-Idea இன் ரூ.99 திட்டம் 18 நாட்கள் செல்லுபடியாகும். இந்த திட்டத்தில் நிறுவனம் 200MB டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு வசதியும் உள்ளது. ஆனால் திட்டத்தில் SMS க்கு பணம் வசூலிக்கப்படும்.
Vodafone-Idea இன் ரூ.109 திட்டம்
Vodafone-Idea இன் ரூ.109 திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் 20 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தில், பயனர்கள் 1 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். இதனுடன், எந்த நெட்வொர்க்கிலும் வரம்பற்ற காலிங் வசதி கிடைக்கும். இந்த திட்டத்தில் SMSக்கும் கட்டணம் வசூலிக்கப்படும்.
Vodafone-Idea இன் ரூ.129 திட்டம்
இந்த திட்டம் 24 நாட்கள் செல்லுபடியாகும், இதில் பயனர்களுக்கு 1 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதனுடன், வரம்பற்ற அழைப்பு மற்றும் 300 இலவச SMS வழங்கப்படுகிறது.
Vodafone-Idea இன் ரூ.149 திட்டம்
Vodafone-Idea இன் ரூ.149 திட்டமானது மாதம் முழுவதும் அதாவது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த திட்டத்தில், பயனர்களுக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதனுடன், நிறுவனம் பயனர்களுக்கு 1 ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்குகிறது. வரம்பற்ற அழைப்புடன் 300 இலவச எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. மற்ற நன்மைகளைப் பற்றி பேசுகையில், இது Vi திரைப்படங்கள் மற்றும் டிவிக்கான இலவச அணுகலைப் தருகிறது.
ALSO READ | Jio, Airtel மற்றும் Vi சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள்: பல நன்மைகளைப் பெறலாம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR