E-Ashwa: மின்சார வாகன உற்பத்தியாளரான இ-அஷ்வா ஆட்டோமோட்டிவ் 12 புதிய மின்சார ஸ்கூட்டர்களுடன் இந்திய சந்தையில் நுழைந்துள்ளது. லித்தியம்-அயன் பேட்டரி மூலம் இயங்கும் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை டெல்லியில் ரூ.58,000 முதல் ரூ.1.30 லட்சம் வரை உள்ளது.
காஜியாபாத்தை தளமாகக் கொண்ட இந்த நிறுவனம் 2021 டிசம்பரில் தனது இரு மற்றும் மூன்று சக்கர மின்சார வாகன (Electric Vehicles) ரேஞ்சை வெளியிட்டது. இது பிஸ்னஸ் டு பிஸ்னஸ் மற்றும் பிஸ்னஸ் டு கஸ்டமர் என இரு பிரிவுகளுக்குமானது. அதாவது, இந்த மின்சார வாகனங்கள் அனைத்தும், சரக்கு போக்குவரத்து மற்றும் தனியார் வாடிக்கையாளர்களுக்கு என இரு பிரிவுகளுக்கும் ஏற்றவாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
670 பிரான்சைஸ்கள் மூலம் நிறுவனம் தனது வாகனங்களை விற்கும்
குறைவான வேகம் கொண்ட இந்த இரு சக்கர வாகனத்தை மணிக்கு 25 கிமீ வேகத்தில் இயக்க முடியும். இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 70 முதல் 100 கிமீ வரை பயணிக்க முடியும். லித்தியம்-அயன் பேட்டரி கொண்ட இந்த மின்சார இரு சக்கர வாகனங்களை 3-4 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்துவிட முடியும் என்றும், லீட் பேட்டரி மூலம் முழுமையாக சார்ஜ் செய்ய 6-8 மணி நேரம் ஆகும் என்றும் இ-அஷ்வா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. நிறுவனம் தனது மின்சார வாகனங்களை நாடு முழுவதும் உள்ள 670 பிரான்சைஸ்கள் மூலம் விற்பனை செய்யும்.
ALSO READ | Eeve Soul: அட்டகாசமான அதிவேக மின்சார ஸ்கூட்டர் அறிமுகம், மிஸ் பண்ணிடாதீங்க!!
மின்சார ஸ்கூட்டர்கள் மற்றும் மின்சார பைக்குகள்
இ-அஷ்வா ஆட்டோமோட்டிவ் நிறுவனர் மற்றும் சிஇஓ விகாஸ் குப்தா கூறுகையில், “நாட்டில் வேறு எந்த மின்சார வாகனப் பிரிவிலும் இல்லாத அளவுக்கு மின்சார இரு சக்கர வாகன சந்தை வேகமாக வளர்ந்து வருகிறது. எனவே, பல்வேறு வகையான வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் பலதரப்பட்ட மின்சார ஸ்கூட்டர்கள் (Electric Scooters) மற்றும் மின்சார பைக்குகளை வழங்குவதை இலக்காகக் கொண்டு இந்த வாய்ப்பை நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.” என்று தெரிவித்தார்.
இதுவரை 6,000 மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன
கடந்த மூன்று ஆண்டுகளாக, இ-அஷ்வா, பல நிறுவனங்களுடன் கொள்கை ஒப்பந்தங்களின் கீழ் மற்ற நிறுவனங்களின் மின்சார வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. எனினும், மின்சார மூன்று சக்கர வாகனங்கள், இ-அஷ்வா நிறுவனத்தின் சொந்த தயாரிப்புகளாகும்.
இ-ஸ்கூட்டர்கள், இ-மோட்டார்பைக்குகள் (E-Motorbikes), இ-ரிக்ஷாக்கள், இ-ஆட்டோக்கள், இ-லோடர்கள், இ-ஃபுட்கார்ட்கள் மற்றும் இ-குப்பை வாகனங்கள் உள்ளிட்ட பிரிவுகளில் 6,000 மின்சார வாகனங்களை விற்பனை செய்துள்ளதாக நிறுவனம் கூறுகிறது.
இப்போது நிறுவனம் தனது சொந்த மின்சார வாகனங்களை உற்பத்தி செய்வதற்காக உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில் ஒரு அதிநவீன தயாரிப்பு ஆலையை சமீபத்தில் திறந்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் அதிகரித்து வரும் மின்சார வாகன சந்தையில் மற்றொரு அசைக்க முடியாத சக்தியாக இந்த நிறுவனம் அதிரடியாக களமிறங்கியுள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR