புனே மக்கள் தற்போது டிஜிட்டல் யுகத்தில் வாழ்வதற்கு தயாராகி வருகின்றனர். ஆம் விரைவில் புனே நகரம் முழுவதும் Wi-Fi சேவையால் நிறையப்போகிறது!
நாடு முழுவதும் 69-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டு வந்தபோது, அன்றைய தினம் புனே முனிஸிபால் கார்பரேசன் "புனே நகரின் 150 இடங்களில் இலவச Wi-fi சேவையினை துவங்கவுள்ளதாக அறிவித்துள்ளது!
2020-ஆம் ஆண்டிற்குள் புனே நகரினை முழுவதும் டிஜிட்டல் யுகமாக மாற்றிவிட வேண்டும் என புனே கார்பரேசன் முயற்சித்து வருகிறது. இந்து முயற்சியின் ஒருபகுதியாக விரைவில் நகரம் முழுவதும் Wi-fi வசதியுடன் நிறப்ப முடிவெடுத்துள்ளது!
தற்போது இந்த வசதி வழங்கப்படவுள்ள 150 இடங்களிலை சுற்றியுள்ள பிரதான பூங்காக்கள், மருத்துவமனைகள் என முக்கிய இடங்களில் வழங்கப்படும் எனவும், விரைவில் இந்த எண்ணிக்கை 199-ஆக அதிகரிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இந்த திட்டத்திற்கு இணைய உலக ஜாம்பவான் கூகிள், புனேவுடன் கைகோர்த்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின்படி ஒவ்வொருவரும் 50MB டேட்டாவினை 512kbps வேகத்தில் தினமும் பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்த இலவச Wi-fi-யானது Pune Wi-Fi என்னும் பெயரில் (UserName) கிடைக்கப்பெறவுள்ளது!