ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், வோடவோன் ஆகிய தனியார் தொலை தொடர்பு நிறுவனங்கள் ஒவ்வொன்றாக, மொபைல் ரீசார்ஜ் கட்டணங்களை அதிகரித்த நிலையில், மக்கள் பலர் பிஎஸ்என்எல் பக்கம் திரும்ப ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், வாடிக்கையாளர்களை தக்க வைக்க, தனியார் நிறுவனங்கள் அவ்வப்போது ஆஃபர்களை அள்ளி வழங்கி வருகின்றன. அந்த வகையில், ஜியோ 8வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில், சில ஆபர்களை வழங்கியுள்ளது.
ஆண்டு நிறைவை முன்னிட்டு ஜியோ வழங்கும் அச்சதலான ஆஃபர் விபரம்
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது 8வது ஆண்டு நிறைவை முன்னிட்டு தனது மொபைல் பயனர்களுக்கு சில சிறப்பு சலுகைகளை கொண்டு வந்துள்ளது. இந்த சலுகைகள் சில நாட்களுக்கு மட்டுமே. அதுவும் சில குறிப்பிட்ட ரீசார்ஜ் திட்டங்களில் மட்டுமே கிடைக்கும். நீங்கள் ஜியோ பயனராக இருந்து, செப்டம்பர் 5 முதல் செப்டம்பர் 10 வரை ரீசார்ஜ் செய்தால், 700 ரூபாய் மதிப்பிலான பலன் கிடைக்கும். இந்த சலுகை ரூ.899 மற்றும் ரூ.999 ஆகிய மூன்று மாத வேலிடிட்டி கொண்ட திட்டங்களிலும் ரூ.3599 ஒரு வருட திட்டத்திலும் ரீசார்ஜ் செய்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜியோ ஆண்டு நிறைவு ஆஃபர்
ஜியோவில் (Reliance Jio) தேர்ந்தெடுக்கப்பட்ட சில திட்டங்களில் இருந்து ரீசார்ஜ் செய்யும் பயனர்களுக்கு ரூ.700 மதிப்பிலான பலன் கிடைக்கும். இதில், 10 OTT செயலிகளின் சந்தா மற்றும் 10GB டேட்டா உள்ளிட்ட பல பலன்கள் கிடைக்கும். ஜியோவின் ரூ.899, ரூ.999 மற்றும் ரூ.3599 மதிப்பிலான ரீசார்ஜ் திட்டங்களில் ரீசார்ஜ் செய்யும்பயனர்கள் ரூ.700 மதிப்புள்ள பின்வரும் நன்மைகளைப் பெறுவார்கள்:
1. ரூ.175 மதிப்புள்ள OTT & டேட்டா பேக். 10 OTT & 10 GB டேட்டா வவுச்சருடன் 28 நாள் வேலிடிட்டி கிடைக்கும்.
2. மூன்று மாதங்களுக்கு Zomato Gold உறுப்பினர் இலவசம்
3. ஆன்லைன் ஷாப்பிங் தளமான அஜியோவில் (Ajio) ரூ. 2999 மற்றும் அதற்கு மேற்பட்ட ஆர்டருக்கு ரூ.500 தள்ளுபடி கிடைக்கும்.
மேலும் படிக்க | ரிலையன்ஸ் ஜியோ.... குறைந்த கட்டணத்தில் தினம் 2GB டேட்டா.... இன்னும் பல நன்மைகள்
ஜியோ வழங்கும் ரூ 899 ரீசார்ஜ் திட்டம் (Relaince Jio Rs.899 recharge Plan Details)
ஜியோ வழங்கும் ரூ. 899 பிரீபெய்ட் திட்டம் 3 மாத வேலிடிட்டி கொண்டது. இதில், வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி கிடைக்கும். இதில் தினமும் 2 ஜிபி டேட்டா உடன் 20ஜிபி கூடுதல் டேட்டா மற்றும் வரம்பற்ற 5ஜி டேட்டாவும் கிடைக்கும்.
ஜியோ வழங்கும் ரூ. 999 ரீசார்ஜ் திட்டம் (Relaince Jio Rs.999 recharge Plan Details)
ஜியோவின் ரூ.999 திட்டம் 98 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இதில், வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினமும் 100 எஸ்எம்எஸ் அனுப்பும் வசதி கிடைக்கும். இதில் தினமும் 2 ஜிபி டேட்டா உடன் வரம்பற்ற 5G டேட்டாவையும் பெறலாம்.
ஜியோ வழங்கும் ரூ.3,599 ரீசார்ஜ் திட்டம் (Relaince Jio Rs.3,599 recharge Plan Details)
ஜியோவின் ரூ.3,599 திட்டம் 356 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இதில், வரம்பற்ற அழைப்புகள் மற்றும் தினம் 100 எஸ்எம்எஸ்கள் அனுப்பும் வசதி கிடைக்கும். தினமும் 2.5 ஜிபி டேட்டா உடன் வரம்பற்ற 5G டேட்டாவையும் பெறலாம்.
கடந்த எட்டு ஆண்டுகளில், ரிலையன்ஸ் ஜியோ 49 கோடி சந்தாதாரர்களைக் ஈர்த்துள்ளது. அதன் நெட்வொர்க் இப்போது உலகளாவிய மொபைல் போக்குவரத்தில் 8 சதவீதத்தைக் கொண்டுள்ளது. ஜியோவின் நெட்வொர்க்கில் ஒரு பயனருக்கு மாதத்திற்கு 30 ஜிபி டேட்டா நுகர்வு உள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜியோ இப்போது இந்தியாவில் டேட்டா டிராஃபிக்கில் 60 சதவீதத்தை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, "நாட்டின் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் திறன்களை உருவாக்குவதில் ஜியோ தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கும்" என்று கூறினார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ