சனி பெயர்ச்சி 2025... ஏழரை நாட்டு சனி எல்லாம் ஒன்றும் செய்யாது... இந்த பரிகாரங்கள் போதும்

Saturn Transit 2025: சனி பகவான் சஞ்சரிக்கும் ராசிக்கும், ஏழரை நாட்டு சனி காலத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு. அந்த வகையில் சனி பெயர்ச்சி தான் எழரை நாட்டு சனி காலத்தை தீர்மானிக்கின்றன.

நீதிக் கடவுளான சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். இந்நிலையில், 2025 சனிப்பெயர்ச்சி, சிலருக்கு ஏழரை நாட்டுச் சனி தொடங்கும், சிலருக்கு ஏழரை நாட்டுச் சனி நீடிக்கும். சிலருக்கு, ஏழரை நாட்டுச் சனியிலிருந்து விடுதலை கிடைக்கும்.

1 /9

சனி பெயர்ச்சி 2025: சனியைப் போல கொடுப்பாரும் இல்லை, சனியைப் போல கெடுப்பாரும் இல்லை என்பார்கள். அந்த வகையில், நீதிக் கடவுளான சனி பகவான், 2025 சனி பெயர்ச்சியின் மூலம், சில ராசிகளுக்கு ஏழரை நாட்டு சனி பாதிப்பு அதிகம் இருக்கும்.  

2 /9

ஏழரை நாட்டு சனி: 2025 சனி பெயர்ச்சியினால் மீன ராசிக்கு ஜென்ம சனி தொடங்கும். கும்ப ராசியினருக்கு பாத சனி, மேஷ ராசியினருக்கு விரய சனி தொடங்கும். ஏழரை சனி காலத்தில் வாழ்க்கையில் சனீஸ்வரர் பல சிக்கல்களை ஏற்படுத்துவார். எனினும், சில பரிகாரங்கள் மூலம் ஏழரை நாட்டு சனி பாதிப்பை பெருமளவு குறைக்கலாம்.

3 /9

எண்ணெய் தானம்: சனிக்கிழமையன்று, இரும்பு பாத்திரத்திரம் ஒன்றில் நல்லெண்ணெய் நிரப்பி, அதில் உங்கள் முகத்தைப் பார்க்கவும். அதன் பிறகு அதனை ஏழை எளிய நபருக்கு பாத்திரத்துடன் எண்ணெய் தானம் செய்யுங்கள். சனிக்கிழமையன்று இதனை செய்வதன் மூலம் சனிபகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

4 /9

அரச மர வழிபாடு: நிதி ரீதியாக ஏற்படும் பிரச்சனைகளை போக்க, சனிக்கிழமை மாலை அரச மரத்தின் கீழ் ஒன்பது  விளக்குகளை ஏற்றி, அரச மரத்தை சுற்றி வரவும். சனிக்கிழமை செய்யும் இந்த பரிகாரம் ஏழரை நாட்டு சனியினால் ஏற்படும் பாதிப்பை பெருமளவு குறைக்கும்.

5 /9

பசுவிற்கு தீவனம் அளித்தல்: சனிக்கிழமையன்று கறுப்புப் பசுவிற்கு தீவனம் கொடுப்பது மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இதனுடன், உங்கள் திறனுக்கு ஏற்ப ஏழை ரஎளியவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். இது சனீஸ்வரரை மகிழ்விக்கிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் தருகிறது.

6 /9

7 /9

சனி மந்திரம் உச்சரித்தல்: சனிக்கிழமை காலை பிரம்ம முஹூர்த்தத்தில், அரச மரத்தின் அடியில் தண்ணீர் தெளித்து அதன் மீது அமர்ந்து, "ஓம் ஷம் ஷனைச்சராய நம" என்ற மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்யவும். இந்த பரிகாரம் சனிபகவானை மகிழ்விப்பதுடன், ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து விடுபட உதவும்.

8 /9

சனி யந்திர வழிபாடு: சனிக்கிழமையன்று சனி யந்திரத்தை வழிபடுவது மங்களகரமானதாக கருதப்படுகிறது. இது சனி பகவானின் பரிபூரண அருளை பெற்றுத்தருவதோடு மட்டுமல்லாமல், ஏழரை நாட்டு சனி பாதிப்பு உட்பட வாழ்க்கையின் பல பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

9 /9

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது.