பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனை ஒப்போ கே10 5ஜி ஆஃபர்: பிளிப்கார்டில் ஆகஸ்ட் 6, 2022 முதல் ஒரு சிறப்பு விற்பனை அரங்கேறி வருகிறது, அதன்படி அந்த சலுகையின் பெயர் பிளிப்கார்ட் பிக் பில்லியன் நாட்கள் விற்பனை ஆகும். இதில் வீட்டுப் பொருட்கள் மற்றும் உடைகள் முதல் எலக்ட்ரானிக் கேஜெட்டுகள் வரை அனைத்திற்கும் பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த விற்பனையின் மூலம், நீங்கள் ஒப்போ கே10 5ஜி ஸ்மார்ட்போனை 25,999 ரூபாய்க்கு பதில் வெறும் 249 ரூபாய்க்கு வாங்கலாம். இந்தச் சலுகையை எப்படிப் பெறலாம் என்பதை இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்ளுங்கள்.
ஒப்போ இலிருந்து மலிவான 5ஜி ஸ்மார்ட்போனை வாங்கவும்
உங்கள் தகவலுக்கு, ஒப்போவின் 5ஜி ஸ்மார்ட்போனான ஒப்போ கே10 5ஜி, பிளிப்கார்டில் ரூ.25,999 விலையில் பட்டியலிடப்பட்டுள்ளது. தற்போது இந்த போன் விற்பனையில் 32% தள்ளுபடிக்கு பிறகு ரூ.17,499க்கு விற்கப்படுகிறது. அத்துடன் ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு பயன்படுத்தி வாங்கும் போது ரூ.500 தள்ளுபடி கிடைக்கும், அதன் பிறகு ரூ.16,999க்கு ஒப்போ கே10 5ஜி போனை வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம்.
மேலும் படிக்க | 5G ஆல் ஸ்மார்ட்போன் யூசர்களுக்கு காத்திருக்கும் தலைவலி
வெறும் 249 ரூபாய்க்கு இப்படி வாங்குங்கள்
ஒப்போ கே10 5ஜி ஐ 249 ரூபாய்க்கு எப்படி வாங்குவது என்று நீங்கள் யோசிக்கிறீர்கள் என்றால், பிளிப்கார்ட் பிக் பில்லியன் நாட்கள் விற்பனை ஒப்பந்தத்தில் ஒரு எக்ஸ்சேஞ்ச் ஆஃபரும் கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் பழைய போனுக்கு பதிலாக இந்த போனை வாங்கினால், ரூ.16,750 வரை தள்ளுபடி பெறலாம். அத்துடன் இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழுப் பலனையும் நீங்கள் பெற்றால், உங்களுக்கு இந்த போனை ரூ.249க்கு வாங்கலாம்.
ஒப்போ கே10 5ஜி இன் அம்சங்கள்
ஒப்போ கே10 5ஜியில், உங்களுக்கு 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. ஒப்போ கே10 5ஜி, மீடியாடெக் டைமன்ஷன் 810 சிப்செட்டில் பணிபுரியும், 6.56-இன்ச் எச்டி + இன்செல் எல்சிடி டிஸ்ப்ளே மற்றும் 5000எம்ஏஎச் பேட்டரி வழங்கப்படுகிறது. ஆடியோ ஜாக் உடன் வெளியிடப்பட்ட இந்த ஸ்மார்ட்போனில் 48எம்பி பிரைமரி சென்சார் மற்றும் 8எம்பி முன்பக்க கேமராவுடன் டூயல் கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | பிரதமருக்காக விரைவில் வாங்கப்படும் விலையுயர்ந்த மின்சார கார்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ