New SIM Card Rules: நாட்டில் சைபர் கிரைம் சம்பவங்கள் அதிகரித்து விட்டன. சிம் கார்டு தொடர்பான மோசடி சம்பவங்கள் குறித்து அவ்வப்போது செய்திகளிலும் கேட்கிறோம். இந்நிலையில் சைபர் மோசடி மற்றும் சிம் கார்டுகளை தவறாக பயன்படுத்துவதை ஆகியவற்றை தடுக்கும் வகையில், முக்கிய நடவடிக்கை ஒன்றை அரசு எடுத்துள்ளது. பிறர் பெயரில் சிம் கார்டு (SIM Card) வாங்க முடியாத வகையிலும், சிம் எண்ணை தவறாக பயன்படுத்த முடியாத வகையிலும் விதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ரூ.50,000 முதல் ரூ.2 லட்சம் வரை அபராதம்
முன்னதாக ஏற்படுத்தப்பட்டுள்ள சட்ட விதிகளின் படி, ஒரு தனிநபர் தனது பெயரில், ஒன்பது சிம் கார்டுகள் வரை மட்டுமே வைத்திருக்கலாம். அதற்கு அதிகமான சிம் கார்டுகள் வைத்திருந்தால், 50,000 ரூபாய் முதல் 2 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். முதல் முறையாக இருந்தால் மட்டுமே ரூ.50,000 அபராதம். இந்த நடவடிக்கை தொடரும் பட்சத்தில், அதிகபட்சமாக ரூ. 2,00,000 வரை அபராதம் விதிக்க சமீபத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தம் வழிவகை செய்கிறது.
புதிதாக அமல்படுத்தப்பட்டுள்ள சிம் கார்டு விதிகள்
சட்ட திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அபராத தொகை வரையறுக்கப்பட்ட எண்ணிக்கைக்கு மேலான சிம் கார்டுகளை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமல்லாது, சட்டத்திற்குப் புறம்பான வயர்லெஸ் கருவிகளைப் பயன்படுத்துவோருக்கும் பொருந்தும் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் அறிவித்திருந்தது, இந்நிலையில், இப்போது, குற்றங்களை தடுக்கும் வகையிலான மற்றொரு நடவடிக்கையாக e-KYC நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது .
சிம் கார்டு விதிகளில் மாற்றம்
மொபைல் போன் சிம் கார்டுகளை வாங்குவதற்கான விதிகளை அரசாங்கம் மாற்றியுள்ளது. புதிய சிம் கார்டைப் பெற, e-KYC (Electronic Know Your Customer) நடைமுறை இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இனி, e-KYC நடைமுறையை பூர்த்தி செய்யாமல் யாரும் புதிய மொபைல் எண்ணைப் பெற முடியாது. e-KYC என்பது ஒரு நபரின் அடையாளம் மற்றும் முகவரி டிஜிட்டல் முறையில் சரிபார்க்கப்படும் நடவடிக்கையாகும். e-KYC சரிபார்ப்பு இல்லாமல் இனி, சிம் கார்டு கிடைக்காது.
மேலும் படிக்க | போன் வாங்க பிளானா... சுமார் ₹25000 விலையில் கிடைக்கும் அசத்தல் போன்கள்...!
வெளிநாட்டு குடிமக்கள் சிம் கார்டுகளை வாங்குவதற்கான விதிகளில் தளர்வு
உள்நாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கான விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாட்டினர் இந்தியாவில் சிம் கார்டுகளை வாங்குவதை எளிதாக்கும் வகையில் புதிய விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. முன்னதாக, வெளிநாட்டவர்கள் ஏர்டெல், ஜியோ அல்லது வோடபோன் சிம் கார்டு வாங்க உள்ளூர் எண்ணிலிருந்து OTP தேவைப்பட்டது. ஆனால், புதிய விதியின்படி, இப்போது அவர்கள் தங்கள் மின்னஞ்சலில் OTP பெறலாம். அதாவது சிம் கார்டை வாங்க, மின்னஞ்சலே போதும். இனி அவர்களுக்கு உள்ளூர் எண் தேவையில்லை.
BSNL 5G சேவை
5ஜி சேவை சந்தையில் ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய தனியார் தொலைதொடர்பு நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் , அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனம் தனது 5G சேவைகளைத் தொடங்கத் தயாராக இருப்பதாகவும், அதற்கான சோதனைகள் நடைபெற்று வருவதால அரசு சமீபத்தில் அறிவித்தது. இதனை அடுத்து, ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் கலக்கத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ