10, 11, 12 பொதுத் தேர்வுகள் 2025: தனித்தேர்வர்கள் விண்ணபிக்க லாஸ்ட் சான்ஸ்... கடைசி தேதி இதுதான்!

Tamil Nadu Public Examinations: தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எழுத தற்போது தட்கல் முறையில் தனித்தேர்வர்கள்  விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை பள்ளி மாணவர்கள் மட்டுமின்றி தனித்தேர்வர்களும் எழுதலாம். அவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்ட நிலையில், தற்போது தட்கல் முறையில் அரசு தேர்வுகள் இயக்கத்தின் சேவை மையத்தில் வழியாகவும் விண்ணபிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

1 /8

தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவ-மாணவியர்களுக்கான பொதுத் தேர்வுகள் 2025ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி தொடங்கி ஏப்.16ஆம் தேதி வரை நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

2 /8

அதில் 12ஆம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 25ஆம் தேதி வரை நடைபெறும். 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் மார்ச் 5ஆம் தேதி தொடங்கி மார்ச் 27ஆம் தேதி வரை நடைபெறும்.

3 /8

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 28ஆம் தேதி தொடங்கி ஏப். 15ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் அனைத்தும் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும்.   

4 /8

இந்த பொதுத் தேர்வினை எழுத பள்ளியில் பயிலும் மாணவர்கள், அவர்களின் பள்ளியின் மூலம் விண்ணப்பம் செய்துள்ளனர். தற்போது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி தனித்தேர்வர்களும் 10, 11, 12ஆம் வகுப்புகளின் பொதுத் தேர்வுகளை எழுதலாம்.   

5 /8

அந்த வகையில், தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க ஆன்லைன் மூலம் டிச.6ஆம் தேதி முதல் டிச.20ஆம் தேதிவரை வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தட்கல் முறையில் தனித்தேர்வர்கள் தேர்வு எழுத விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.   

6 /8

கடந்த டிச. 21ஆம் தேதி அரசுத் தேர்வுத்துறை இயக்குநர் லதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கடந்த டிச. 6 முதல் டிச. 20ஆம் தேதி வரை தனித்தேர்வர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அப்போது விண்ணப்பம் செய்யாதவர்கள் டிச. 23ஆம் தேதி (அதாவது இன்று) முதல் 26ஆம் தேதி வரை வாய்ப்பு நீட்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  

7 /8

மேலே குறிப்பிட்ட தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையில் அரசு தேர்வுகள் இயக்கத்தின் சேவை மையத்தில் 11,12 ம் வகுப்பிற்கு கூடுதலாக ஆயிரம் ரூபாயும், 10 ம் வகுப்பிற்கு 500 ரூபாயும் செலுத்தி ஆன்லைன் மூலம் தக்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது.  

8 /8

அரசுத் தேர்வுகள் இயக்கத்தின் சேவை மையங்களின் விவரம், ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை தனித் தேர்வர்கள் பதிவு செய்வதற்கான தகுதி, அறிவுரைகள் ஆகியவற்றை கொடுக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககம் (www.dge.tn.gov.in) இணையதளத்தில் தெரிந்துக் கொள்ளலாம் எனவும் அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.