Bounce Infinity: எலக்ட்ரிக் ஸ்டார்ட்அப் நிறுவனமான பவுன்ஸ் இன்று இந்தியாவில் தனது புதிய இன்பினிட்டி மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டரை நிறுவனம் வெறும் ரூ.36,000 என்ற எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இது பேட்டரி இல்லாத ஸ்கூட்டரின் விலையாகும்.
பேட்டரியுடன் இந்த ஸ்கூட்டரின் விலை ரூ.68,999 ஆகும். நிறுவனம் இன்று முதல் இந்த மின்சார ஸ்கூட்டருக்கான முன்பதிவை தொடங்கியுள்ளது. இந்த மின்சார ஸ்கூட்டரை வெறும் ரூ.499 செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
பவுன்ஸ் டிசம்பர் நடுப்பகுதியில் இருந்து இன்ஃபினிட்டியின் டெஸ்ட் டிரைவுகளைத் தொடங்கும். மேலும், இந்த ஸ்கூட்டர்கள் மார்ச் 2022 முதல் வாடிக்கையாளர்களுகளிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
'Battery-as-a-Service' வசதி
பவுன்ஸ் நிறுவனம் இன்ஃபினிட்டியை 5 வண்ணங்களில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர் பேட்டரியுடனும் பேட்டரி ஆப்ஷன் இல்லாமலும் கிடைக்கிறது. 'Battery-as-a-Service' வசதியின் கீழ், வாடிக்கையாளர்கள் பேட்டரி இல்லாமல் இந்த மின்சார வாகனத்தை வாங்கலாம்.
இந்த மலிவான விலையின் மூலம், நிறுவனம் மின்சார இரு சக்கர வாகனப் பிரிவில் பெரும் போட்டியை உருவாக்கியுள்ளது. இப்போது பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக், டிவிஎஸ் ஐக்யூப், ஏதர் 450 எக்ஸ் மற்றும் ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) ஸ்கூட்டர்களின் விலை மிக அதிகமாக இருப்பதால் அவற்றுக்கு சவாலான சூழல் உருவாகியுள்ளது.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 85 கிமீ தூரம் செல்லும்
பவுன்ஸ் இன்ஃபினிடி, (Bounce Infinity) 2 kWh-R லித்தியம்-அயன் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் 85 கிமீ தூரம் வரை செல்லும். இந்த மின்சார வாகனத்தின் அதிகபட்ச வேகம் மணிக்கு 65 கிமீ ஆகும்.
ALSO READ:Greta: அட்டகாசமான அம்சங்களுடன் அசத்தல் விலையில் மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்
பவுன்ஸ் இன்பினிட்டியில் டிராக் மோடும் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் பஞ்சரானாலும் ஸ்கூட்டரை ஓட்ட முடியும். இந்த புதிய மின்சார ஸ்கூட்டரை (Electric Scooter) ஸ்மார்ட் செயலிகளுடனும் இணைக்கலாம். இது பல அம்சங்களைப் பயன்படுத்துவதை மிகவும் எளிதாக்குகிறது.
ராஜஸ்தானில் உள்ள பிவாடி ஆலையில் உற்பத்தி தொடர்கிறது
2021 ஆம் ஆண்டில், சுமார் 52 கோடி ரூபாய்க்கு 22Motors உடன் 100 சதவீத ஒப்பந்தத்தை மேற்கொண்டதாக நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், மின்சார வாகன உற்பத்தியாளரான பவுன்ஸ், ராஜஸ்தானில் உள்ள 22 மோட்டார்ஸின் பிவாடி ஆலை மற்றும் அங்குள்ள சொத்துகளின் உரிமையைப் பெற்றுள்ளது.
இந்த ஆலை ஆண்டுக்கு 1,80,000 ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்யும். இது தவிர, தென்னிந்தியாவில் புதிய ஆலை தொடங்குவதற்கான திட்டத்தையும் நிறுவனம் அறிவித்துள்ளது.
ALSO READ:Ola EVக்கு போட்டியாக களமிறங்கும் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR