உங்களிடம் கார் உள்ளதா? இந்த பார்க்கிங் டிப்ஸ் மிக உதவியாக இருக்கும்

Car Maintenance Tips:நீங்களும் உங்கள் வாகனத்தை பல நாட்கள் ஒரே இடத்தில் பார்க் செய்ய வேண்டியிருந்தால், சில குறிப்புகள் மூலம் உங்கள் கார் பழுதடையாமல் பார்த்துக்கொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 21, 2023, 10:45 AM IST
  • பேட்டரியை கவனித்துக்கொள்ளுங்கள்.
  • ஹேண்ட்பிரேக் போட்டு வைக்க வேண்டாம்.
  • டேங்கை நிரப்பி வைக்கவும்.
உங்களிடம் கார் உள்ளதா? இந்த பார்க்கிங் டிப்ஸ் மிக உதவியாக இருக்கும் title=

நீண்ட நேரம் பார்க் செய்யப்பட்ட கார், பராமரிப்பு குறிப்புகள்: சில காரணங்களால் பலர் தங்கள் காரை நீண்ட நேரம் ஒரே இடத்தில் பார்க் செய்ய வேண்டி வருகிறது. சிலர் குடும்பத்தில் பிற நபர்களின் காரை பயன்படுத்திக்கொண்டு இருக்கலாம், அல்லது சிலர் ஏதேனும் காரணத்தால் தங்கள் வீட்டை விட்டு நீண்ட காலம் வெளியே இருக்க வேண்டி வரலாம். ஆனால் நீண்ட நேரம் காரை ஒரே இடத்தில் நிறுத்துவது காருக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தும். ஏனெனில் அவ்வாறு செய்வதன் மூலம், காரின் டயர்கள் உட்பட பல பாகங்கள் முற்றிலும் சேதமடைந்துவிடும். நீங்களும் உங்கள் வாகனத்தை பல நாட்கள் ஒரே இடத்தில் பார்க் செய்ய வேண்டியிருந்தால், சில குறிப்புகள் மூலம் உங்கள் கார் பழுதடையாமல் பார்த்துக்கொள்ளலாம். அந்த உதவிக்குறிப்புகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

பேட்டரியை கவனித்துக்கொள்ளுங்கள்

வாகனத்தை நீண்ட நேரம் பார்க் செய்யும் போதெல்லாம், அதன் பேட்டரி சக்தி வடிந்துவிடும். இதன் காரணமாக பேட்டரி திறன் வேகமாக குறையத் தொடங்குகிறது. இதைத் தவிர்க்க, 8-10 நாட்களுக்கு ஒரு முறை காரை ஸ்டார்ட் செய்து சிறிது நேரம் விட்டு விடுங்கள். இது பேட்டரி மற்றும் இன்ஜின் இரண்டின் ஆயுளையும் பராமரிக்கும்.

டயர்கள் சேதமடையலாம்

ஒரு இடத்தில் நீண்ட நேரம் வாகனம் நிறுத்தப்பட்டிருந்தால், அதன் டயர்கள் அதே இடத்தில் இருந்து ஒட்டிக் கொள்ளும். இதைத் தவிர்க்க, 10-15 நாட்களுக்கு ஒருமுறை காரை சிறிது தூரம் ஓட்டவும். இதனால் காரின் பிரேக், கிளட்ச், ஏசி, பேட்டரி மற்றும் இன்ஜின் அனைத்தும் பராமரிக்கப்படும்.

ஹேண்ட்பிரேக் போட்டு வைக்க வேண்டாம்

நீண்ட நேரம் வாகனத்தை பார்க் செய்ய வேண்டியிருந்தால், ஹேண்ட் பிரேக் ஆன் செய்து விட்டு செல்லாதீர்கள். இதன் காரணமாக, பிரேக் பேட்கள் நெரிசலாகி, ஹேண்ட்பிரேக்கை அகற்றும்போது, ​​அவை உடைந்து போகக்கூடும். இதன் காரணமாக அவற்றை மாற்றுவதற்கு நீங்கள் அதிக செலவழிக்க வேண்டியிருக்கும். இதைத் தவிர்க்க, காரை முதல் கியரில் விட்டுவிட்டு, சக்கரங்களுக்கு அடியில் ஒரு மரம் அல்லது செங்கல் வைக்கவும்.

மேலும் படிக்க | Mahindra Thar: ஜூன் மாதம் அதிரடி தள்ளுபடிகள்: குஷியில் வாடிக்கையாளர்கள்

டேங்கை நிரப்பி வைக்கவும்

வாகனம் நிறுத்தப்படும்போதும் டேங்கை நிரப்பி வைத்திருங்கள். ஏனெனில் இது எரிபொருள் டேங்குக்குள் துருப்பிடிப்பதைத் தடுக்கும். மேலும் டேங்கில் ஈரப்பதமும் சேராது. மேலும், உங்களுக்கு எப்போதாவது அவசரகாலத்தில் வாகனம் தேவைப்பட்டால், உங்கள் இலக்கை அடைய போதுமான எரிபொருள் உங்கள் வாகனத்தில் இருக்கும்.

பொதுவான பார்க்கிங் குறிப்புகள்:

ஒரு கார் ஓட்டுநரின் திறமையை அவர் எப்படி வாகனத்தை பார்க் செய்கிறார், அதாவது நிறுத்துகிறார் என்பதை வைத்தே தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. உங்கள் வாகனத்தின் பாதுகாப்பு நீங்கள் எப்படி, எங்கு காரை நிறுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. கார் பார்க்கிங் குறித்த சில குறிப்புகளை இங்கே காணலாம்.

பார்க்கிங்கிங்குக்கான இடத்தில் காரை நிறுத்துங்கள்

- நீங்கள் காரை நிறுத்தும் போதெல்லாம், அந்த இடம் பார்க்கிங்கிற்கானதா இல்லையா என்பதைப் பார்க்கவும்.

- நோ ஸ்டாண்டிங் சோன் மற்றும் நோ பார்க்கிங் சோன் ஆகிய இடங்களில் வாகனத்தை நிறுத்த வேண்டாம்.

- எந்த வீட்டின் கேட் முன்பும், கடை முன்பும் காரை நிறுத்த வேண்டாம்.

இந்த இடங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டாம்

- பேருந்து நிறுத்தங்கள், தபால் பெட்டிகள் அல்லது டாக்ஸி அல்லது ஆட்டோ ஸ்டாண்டுகள் போன்ற இடங்களில் கார்களை நிறுத்த வேண்டாம்.

- மரத்தடியில் வாகனத்தை நிறுத்துவதை தவிர்க்கவும். மரக்கிளைகள் விழும் அபாயம் உள்ளது.

- இதனுடன், பலத்த காற்று அல்லது புயல் வந்தால் மரமே விழக்கூடும், இது உங்கள் காருக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும்.

- நீங்கள் காரை சுவருக்கு அருகில் பார்க் செய்தால், போதுமான இடைவெளி கொடுத்து பார்க் செய்யவும். 

ஹேண்ட் பிரேக்கின் சரியான பயன்பாடு

- மலைப்பாங்கான பகுதிகளில் வாகனத்தை நிறுத்தும்போது ஹேண்ட் பிரேக்கைப் பயன்படுத்துவதை உறுதி செய்யவும்.

- வாகனத்தை நியூட்ரல் கியரில் வைத்து ஹேண்ட் பிரேக் போடுவது சிறந்த வழி.

- நீங்கள் ஹேண்ட் பிரேக்கைப் பயன்படுத்தினால், புஷ் பொத்தானை அழுத்த வேண்டும்.

- மக்கள் காரை பார்க் செய்து கியரில் போடுகிறார்கள். இப்படி செய்யக்கூடாது. இதன் காரணமாக சுமை ஹேண்ட் பிரேக்கில் இல்லாமல் கியர் மீது இருக்கும். 

மேலும் படிக்க | கார் வாங்கும் எண்ணம் உள்ளதா? குறைந்த விலை, அதிக திறன் கொண்ட கார்கள் இவைதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News