சில்லறை வர்த்தக நிறுவனங்களில் கொரோனா தொற்றுநோய் காரணமாக ஏற்பட்ட பொருளாதார இழப்பினால் தொழிலாளர் மற்றும் போக்குவரத்து செலவுகள் காரணமாக ஏற்பட்ட செலவுகளை சமாளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் பிரைம், சேவைகளின் விலைகளை 17% உயர்த்துவதாக அறிவித்தது. இந்த விலையுயர்வின்படி வருடாந்திர பிரைம் மெம்பர்ஷிப்கள் $119 லிருந்து $139 ஆக அதிகரிக்கும். இதனை போல மாதாந்திர சந்தாக்கள் $12.99 லிருந்து $14.99 ஆக அதிகரிக்கும்.
ALSO READ | தேசிய கொடி அவமதிப்பு விவகாரம்; அமேசான் மீது வழக்கு பாய்கிறதா?
2018 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்நிறுவனம் முதல்முறையாக தற்போது விலை உயர்வை அதிகரித்து இருக்கிறது. இந்த புதிய விலை மாற்றம் புதிய பிரைம் (Prime) சந்தாதாரர்களுக்கு பிப்ரவரி-18ம் தேதியும், ஏற்கனவே உள்ள சந்தாதாரர்களுக்கு மார்ச்-25ம் தேதிக்குப் பிறகும் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் காரணமாக அமேசான் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்து இருப்பதோடு, இந்த சேவையை ரத்து செய்யவும் கோரிக்கை வைக்கின்றனர். மேலும் அமேசான் நிறுவனரும் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஜெஃப் பெசோஸ் இந்த பணத்தை தனது சொந்த நலனுக்காக பயன்படுத்துவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
அமேசான் பிரைமை (Amazon Prime)ரத்து செய்ய வேண்டிய நேரம் இது, அவர்களுக்கு நிலையான 2 நாள் ஷிப்பிங் கூட இல்லை, இதில் அவர்கள் விலையை அதிகரித்து இருக்கின்றனர் என்று பயனர் ஒருவர் கேலியாக கூறியுள்ளார். கடந்த வியாழன் அன்று அமேசானின் பங்குகள் 17% உயர்ந்து வெற்றி பெற்றுள்ளது என்று நிறுவனத்தின் Q4 2021 தகவல் அளித்தது. அதேபோல கடந்த ஆண்டு இதே நேரத்தில் விற்பனையானது 9% அதிகரித்து, $137.4 பில்லியன் என்ற அளவில் இருந்தது. இந்நிறுவனம் மட்டும் அதன் புதிய மற்றும் பழைய சந்தாதாரர்களுக்கு விலை உயர்வை அறிமுகப்படுத்தவில்லை. கடந்த மாதம், நெட்ப்ளிக்ஸ்அதன் வாடிக்கையாளர்களுக்கு $1 மற்றும் $2 இடையே விலைகளை உயர்த்துவதாக அறிவித்தது.
So Amazon is raising the Prime membership costs again! Saying it’s because of expanded Prime membership benefits! Ummm. Ok? Remind me how much money they made last year?
— Jarett & Lilly vs EVERYTHING (@JLVsTW1) February 3, 2022
Amazon is raising its Prime membership price because Jeff Bezos is tired of using his $500 million yacht on common public oceans, he wants to buy the Pacific.
— scott (@ScottGWrites) February 4, 2022
ALSO READ | இதையெல்லாம் கண்டிப்பாக செய்யாதீர்கள்: RBI விடுத்த எச்சரிக்கை
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR