Best Bikes in India: பெட்ரோல், டீசல் விலை உயர்வு பைக் மற்றும் கார் வைத்திருப்பவர்களின் பட்ஜெட்டை வெகுவாக அதிகரித்யுள்ளது. இதனால், பொது மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகரித்து வரும் பெட்ரோல் விலையால், தற்போது கார் மற்றும் பைக் வைத்திருப்பவர்களின் பிரச்சனை அதிகமாகியுள்ளது. இந்த நிலையில் பைக் வைத்திருப்பவர்களுக்கு உதவும் வகையில், சிறப்பான மைலேஜ் தரும் 7 பைக்குகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.
டிவிஎஸ் ஸ்போர்ட்ஸ்:
சிறந்த மைலேஜ் பற்றி பேசினால், டிவிஎஸ்ஸின் டிவிஎஸ் ஸ்போர்ட்ஸ் (TVS Sports) பைக் இதில் முதலிடத்தில் உள்ளது. இந்த பைக்கில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 95 கிமீ மைலேஜ் கிடைக்கும். இருப்பினும், இந்த வாகனம் பழையதாக ஆக மைலேஜ் பாதிக்கப்படலாம். இந்த பைக்கில் 99.7 இன்ஜின் உள்ளது.
பஜாஜ் பிளாட்டினா:
குறைந்த விலையில் அதிக மைலேஜ் தரும் பைக்கை வாங்க விரும்பினால், பஜாஜின் இந்த பைக் சிறந்த தேர்வாக இருக்கும். இது CT100 இன் பிரீமியம் பதிப்பாகும். இதில், 1 லிட்டர் பெட்ரோலுக்கு 90 கிமீ மைலேஜ் கிடைக்கும்.
பஜாஜ் சிடி 100:
Bajaj CT 100 பைக் பஜாஜின் அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் ஒன்றாகும். இது 99.27 இன்ஜினைக் கொண்டுள்ளது. இந்த பைக் 1 லிட்டர் பெட்ரோலில் 90 கிமீ வரை மைலேஜ் தரும்.
ALSO READ: மிகச்சிறந்த மைலேஜ் அளிக்கும் இந்தியாவின் டாப் 5 கார்கள்
ஹீரோ ஹெச்.எஃப் டீலக்ஸ்:
நீங்கள் Hero மோட்டார்ஸின் ரசிகராக இருந்து உங்கள் பைக்கில் அதிக மைலேஜ் பெற விரும்பினால், Hero's Hero HF Deluxe உங்களுக்கான சிறந்த தேர்வாக இருக்கும். இந்த பைக் 1 லிட்டர் பெட்ரோலில் 83 கிமீ மைலேஜ் தரும்.
Hero Splendor iSmart:
இந்த Hero பைக்கும் அதிகம் விற்பனையாகும் பைக்குகளில் ஒன்றாகும். இதில் 97.2 சிசி இன்ஜின் உள்ளது. இந்த பைக் 1 லிட்டர் பெட்ரோலில் 90 முதல் 100 கிமீ வரை மைலேஜ் தரும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மஹிந்திரா செஞ்சுரோ:
நீங்கள் பிராண்டிற்கு அப்பால் சென்று மைலேஜுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க விரும்பினால், மஹிந்திரா (Mahindra) செஞ்சுரோவும் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். இந்த பைக்கில், 1 லிட்டர் பெட்ரோலுக்கு 85.2 கிமீ மைலேஜ் கிடைக்கும்.
டிவிஎஸ் ஸ்டார் சிட்டி ப்ளஸ்:
TVS Star City Plus என்ற இந்த டிவிஎஸ் (TVS) மாடல் மைலேஜிலும் சிறப்பானது. இந்த பைக் 1 லிட்டர் பெட்ரோலில் 86 கிமீ வரை மைலேஜ் தருகிறது.
ALSO READ: Top 5 Budget cars: ரூ.5 லட்சம் பட்ஜெட்டில் கிடைக்கும் அசத்தலான கார்களின் பட்டியல் இதோ
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR