சேலம் நாழிக்கல்பட்டி அம்பேத்கார் காலனியை சேர்ந்தவர் பச்சையப்பன் மகன் திருநாவுக்கரசு, பெயிண்டர் தொழில் செய்பவர். தனது மாமனார் சபரிமலை செல்வதற்காக வழி அனுப்பி வைப்பதற்கு வெளியூரிலிருந்து வந்த திருநாவுக்கரசு, கடந்த 17ஆம் தேதி இரவு நாழிக்கல்பட்டி வந்தார். அங்கு நண்பர் சரவணன் பேசிக்கொண்டிருந்தபோது 15 பேர் கொண்ட கும்பல் இருவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடினர்.
இதில் படுகாயம் அடைந்த திருநாவுக்கரசு உயிரிழந்தார். நண்பர் சரவணன் தொடர்ந்து சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொலை குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ALSO READ | காதலியை கொன்ற வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது
இதனையடுத்து இந்த கொலை வழக்கு தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் டிஎஸ்பி தையல்நாயகி காவல் ஆய்வாளர் கலையரசி தலைமையில் தனிப்படை அமைத்தார். தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நாழிக்கல்பட்டி அம்பேத்கர் நகரை சேர்ந்த மணிவண்ணன் மகன் கவுதம் என்கின்ற கௌதமன், ராசப்பன் மகன் பாலியால், வெங்கடாசலம் மகன் பாலாஜி, ராதாகிருஷ்ணன் மகன் தமிழன்பன், அர்ஜுனன் மகன் தங்கவேல், சுப்பிரமணி மகன் குமரேசன், ரமேஷ் மகன் அழகுமணி, என்கின்ற அழகு மணிகண்டன் மற்றும் 17 வயது கொண்ட இரண்டு சிறுவர்கள் ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் அனைவரும் 18லிருந்து 20 வயதுக்குட்பட்டவர்கள்.
கைது செய்யப்பட்ட 9 பேர் காவல் துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில் கடந்த 2019ஆம் ஆண்டு நாழிக்கல்பட்டி விநாயகர் சதுர்த்தி விழாவின் போது ஏற்பட்ட தகராறில், எனது நண்பர் திலீப்குமாரை திருநாவுக்கரசு மற்றும் சரவணன் வெட்டி கொலை செய்தனர் அதற்கு பழி வாங்குவதற்காகவே திருநாவுக்கரசை கொலை செய்த முடிவு செய்தோம் என்றும் அவர் வெளியூர் சென்றிருந்ததால் மீண்டும் திரும்பி வரும் வரை காத்திருந்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
ALSO READ | திருநங்கையாக மாறிய மகனை அடித்து கொலை செய்த தாய்
இந்த நிலையில் தன்னுடைய மாமனார் சபரிமலை கோவிலுக்கு செல்ல இருந்த நிலையில் வழி அனுப்பி வைப்பதற்காக வந்த திருநாவுக்கரசை பார்த்ததும் ஆத்திரம் ஏற்பட்டது. எனவே நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கொலை செய்ய திட்டம் போட்டு, அதன்படி தனியாகப் பேசிக் கொண்டிருந்த திருநாவுக்கரசு மற்றும் சரவணன் ஆகியோரை நாங்கள் சுற்றிவளைத்து கத்தி மற்றும் கல்லால் மாறி மாறி தாக்கினோம். இதில் திருநாவுக்கரசு உயிரிழந்துவிட்டார் இவ்வாறு வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்
பொதுவாக இதுபோன்ற குற்றவாளிகள் 18 லிருந்து 20 வயதுக்குட்பட்டவர்களே உள்ளனர். படித்து வாழ வேண்டிய வயதில் ,ஏதோ சில சந்தர்ப்பங்களில் இது போன்ற குற்றவாளிகள் அதிகரித்திருப்பது சமுதாயத்தில் கவலைக்குரிய விஷயமாக உள்ளது.
ALSO READ | எங்கே இருக்கிறார் ராஜேந்திராபாலாஜி? சகோதரி மகன் உள்ளிட்ட 3 பேர் கைது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR