குடிநீர் வழங்க மறுத்த துரைமுருகனுக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதவியா? - எச். ராஜா

சென்னைக்கு குடிநீர் வழங்க மறுத்த அமைச்சர் துரைமுருகனுக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதவியா என  எச். ராஜா குற்றம் சாட்டி உள்ளார்.    

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 17, 2021, 04:07 PM IST
குடிநீர் வழங்க மறுத்த துரைமுருகனுக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதவியா? - எச். ராஜா title=

வேலூர் அருகே பெருமுகை என்ற இடத்தில் இன்று பாஜகவின் கொள்கை மற்றும் திட்டங்கள் குறித்த மூன்று நாள் பயிற்சி முகாம் தொடங்கியது . இதனை பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச் ராஜா துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதில் தோற்றுவிட்டது .திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த எந்த ஒரு திட்டமும் நிறைவேற்றப்படவில்லை குறிப்பாக குறிப்பாக மதுவிலக்கு கொண்டுவரப்படும் என கூறினார்கள். அதனை செய்யாமல் மதுக்கடைகளின் திறப்பு நேரம் அதிகரித்துள்ளது. குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் தருவதாக திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது ஆனால் அதனை வழங்காமல் அந்த நீதியை வழங்க கமிட்டி போடுவதாக தெரிவித்துள்ளார்கள்.

ALSO READ | தமிழக அரசின் மாநிலப் பாடலாக ’தமிழ்த்தாய் வாழ்த்து’ அறிவிப்பு

மக்கள் விரோத ஆட்சியில் ஈடுபட்டுள்ள திமுகவைப் பற்றி தற்போது விமர்சனங்கள் எழுந்துள்ளது.  அதனைத் தாங்க முடியாமல், பாஜக தலைவர் அண்ணாமலையை தமிழக அமைச்சர் விமர்சனம் செய்து வருகிறார்.  திமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் ,கட்டப்பஞ்சாயத்து செய்பவர்கள் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டுள்ளது.  முதலமைச்சர் தொகுதியான கொளத்தூர் தொகுதியில் உள்ள அவ்வை  நகரில் வார்டு 60, 61 ஆகிய பகுதிகளில் மேம்பாலங்கள் மற்றும் பூங்கா ஆகியவற்றை அமைக்க ,அங்கிருந்த 120 வீடுகளை இடிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு மாற்று இடம் வழங்காமல் இந்த மக்கள் விரோத செயல்களில் திமுக ஆட்சி செயல்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்களில் திமுக அரசு ஈடுபட்டு வருவதால் விரைவில் ஆட்சி கவிழும் நிலை ஏற்படும் ,இந்த மக்கள் விரோத ஆட்சியை மக்கள் விரைவில் அகற்றுவார்கள். அதற்கான நேரம் கனிந்து வருகிறது. திமுக அரசு பொறுமை இழந்த அரசாக செயல்பட்டு வருகிறது. தங்களைத் திருத்திக் கொள்ளாவிட்டால் மோசமான நிலை ஏற்பட வாய்ப்புள்ளது எனக் கூறினார்.

hraja

2001-ஆம் ஆண்டு குஜராத்தில் நரேந்திர மோடி முதலமைச்சராக இருந்த போது அந்த மாநிலத்தில் மழை நீர் வீணாகாமல் இருப்பதற்காக லட்சக்கணக்கான தடுப்பணைகளை காட்டினார். இதன்மூலம் பருவமழை காலங்களில் பெய்யும் மழை நீரை வீணாக்காமல் அந்த மாநிலத்தில் நீராதாரம் அதிகரித்தது.  ஆனால் தமிழகத்தில் அப்படி ஒரு நிலை இல்லை. குறிப்பாக காவிரியில்தூர் வாராத காரணத்தினால்  புதர் மண்டி உள்ளது. மழை நீரைத் தேக்கி வைக்க போதிய நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் பருவமழை காலங்களில் பெய்யும் மழைநீர் வீணாக கடலில் சென்று கலந்து வருகிறது. எனவே ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சராக இருக்கும் துரைமுருகன் அவருடை தொகுதியில் கூட பாலாற்றில் ஒரு அணைகள் கூட கட்ட வில்லையே என செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் தொகுதியில் மட்டுமில்லை தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் தடுப்பணைகள் கட்ட வில்லை. தமிழக முதலமைச்சர் இப்படிப்பட்டவர்களுக்கு தான் அமைச்சர் பதவி கொடுத்துள்ளார்.  குறிப்பாக கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் கதர் வாரிய துறை அமைச்சர் , கட்டப்பஞ்சாயத்து செய்பவருக்கு அறநிலை துறை அமைச்சர், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க மறுத்த துரைமுருகனுக்கு நீர்வளத்துறை அமைச்சர் பதவி என அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அமைச்சர் துரைமுருகன் ,ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் வழங்க மறுக்கும் காரணம் , காட்பாடியில் அருவி என்ற பெயரில் தண்ணீர் வியாபாரம் செய்து வருகிறார் என எச் ராஜா கூறினார்.

ALSO READ | மாரிதாசை போல் அண்ணாமலையை கைது செய்ய முடியுமா? சி.வி.சண்முகம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News